×

சீசன் களை கட்டுகிறது வெளிநாட்டு பறவைகள் கோடியக்கரையில் குவிந்தன : பார்வையாளர்கள் உற்சாகம்

வேதாரண்யம் : நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. பறவைகளின் நுழைவு வாயில் என்று அழைக்கப்படும் இந்த சரணாலயத்திற்கு அக்டோபர் முதல் மார்ச் வரை லட்சக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் வந்து செல்லும். ஆர்ட்டிக் பிரதேசங்களில் நிலவும் கடும் குளிரை போக்கவும், உணவுக்காகவும் பறவைகள் லட்சக்கணக்கில் வந்து செல்கின்றன. பருவமழை தொடங்க உள்ள நிலையில் தற்போது சைபீரியாவிலிருந்து பூநாரை உள்ளான், கரண்டிமூக்கு நாரை, சிறவிகள், இலங்கை, பர்மாவிலிருந்து கூழைக்கிடா, செங்கால் நாரை, கடல்காகம் மற்றும் உள்ளூர் பறவைகளான கொக்கு, மடையன், சாம்பல்நாரை, பவளக்கால் உள்ளான் மற்றும் பல்வேறு நாடுகளிலிருந்து 1.50 லட்சம் பறைவகள் வந்துள்ளன.

பறவைகளை பார்த்து ரசிக்க தினமும் பார்வையாளர்கள் கூட்டமும் அதிகரித்து வருகிறது. கோடியக்கரை பம்பு ஹவுஸ், நெடுந்தீவு, சிறுதலைகாடு ஆகிய பகுதிகளில் இருந்து காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் மக்கள் விதவிதமான பறவைகளை பார்த்து குதூகலிக்கின்றனர். இன்னும் அதிகளவில் பறவைகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற ஆண்டு பறவைகள் மற்றும் வனவிலங்கு சரணாலயத்தை 30,805 சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர். இந்த ஆண்டு ஐம்பதாயிரத்திற்கும் மேல் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பு அம்சமாக கோடியக்கரையிலிருந்து பழந்தின்னி வவ்வால்கள் நாள்தோறும் இலங்கை அனுராதாபுரம் காட்டுப்பகுதிக்கு சுமார் 28 மைல் தொலைவில் பறந்து சென்று பழங்களை தின்று அதேநாளில் மீண்டும் திரும்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : visitors , Season brewing weeds, birds,corner, visitors are enthusiastic
× RELATED தீவுத்திடலில் 70 நாள் நடந்த சுற்றுலா...