×

சிறு, நடுத்தர தொழில்களை ஊக்குவிப்பதற்கான புதிய நடவடிக்கை: நாளை பிரதமர் மோடி அறிவிப்பு என தகவல்

டெல்லி: சிறு மற்றும் நடுத்தர தொழில்களை ஊக்குவிப்பதற்கான புதிய நடவடிக்கைகளை மத்திய அரசு நாளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்களுக்கு ஆதரவளிக்கும் வகையிலான திட்டங்களின் தொடக்க நிகழ்ச்சி நாளை டெல்லியில் நடைபெறுகிறது. இந்த நிகழச்சியை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைப்பார் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

நிகழ்ச்சியில் சிறு மற்றும் நடுத்தர தொழில்களை ஊக்குவிப்பதற்கான புதிய நடவடிக்கைகளை பிரதமர் மோடி அறிவிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் கடன் பெறுவதற்கான விதிமுறைகளை தளர்த்துதல், நிதிச்சந்தைகளை அணுகுவதை அதிகரிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தல் உள்ளிட்ட புதிய நடவடிக்கைகள் இதில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : announcement ,Modi , Small, medium industry, PM Modi, announcement, information
× RELATED விவேகானந்தர் மண்டபத்தை பிரதமர் மோடி...