×

பரபரப்பை ஏற்படுத்துகிறது Metoo: நடிகை மீது மற்றொரு நடிகை பாலியல் புகார்

சென்னை: Metoo மூலம் நடிகை மீது மற்றொரு நடிகை பாலியல் புகார் தெரிவித்துள்ளார். சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பல்வேறு தரப்பினர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை metoo மூலம் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழில் வானவில் திரைப்படத்தில் அறிமுகமான நடிகை மாயா கிருஷ்ணன், தொடர்ந்து தனுசின் தொடரி, ஜோதிகாவுடன் மகளிர் மட்டும், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன், விக்ரமுடன் துருவநட்சத்திரம் படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்துடன் 2.0 படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் மாயா கிருஷ்ணன் மீது மாடல் அழகியும், நடிகையுமான அனன்யா ராம்பிரசாத் மீ டூவில் பாலியல் புகார் கூறியுள்ளார். அனன்யா ராம்பிரசாத் கூறுகையில் எனக்கு வயது 18 இருக்கும்போது மாயா கிருஷ்ணனை சந்தித்தேன், மாயா எனக்கு வழிகாட்டியாக நிறைய ஆலோசனைகள் கூறினார். அவரை முழுமையாக நம்ப ஆரம்பித்தேன். அடுத்த சில மாதங்களில் இருவரும் நெருக்கமாக பழகினோம். ஒரு கட்டத்தில் என்னை கட்டிப்பிடித்தார், முத்தமிட்டார். பாலியல் ரீதியாகவும் பயன்படுத்தினார் என்று பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : actress , Metoo, actress, sexual complaint
× RELATED கேன்ஸ் விழாவில் விருது பெற்ற முதல் இந்திய நடிகை அனசுயா சென்குப்தா..!