×

நெதர்லாந்து விலங்கியல் பூங்காவில் பார்வையாளர்கள் முன் கரடிகள் தாக்கியதில் ஒரு ஓநாய் உயிரிழப்பு

நெதர்லாந்து: நெதர்லாந்து நாட்டின் விலங்கியல் பூங்கா ஒன்றில் 4 கரடிகள் சேர்ந்து ஒரு ஓநாயை தாக்கிக் கொன்ற சம்பவம் பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. டைரன்ரிஜ்க் எனும் இடத்தில் உள்ள விலங்கியல் பூங்காவில் பழுப்புக் கரடிகளும், ஓநாய்களும் ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தன. அப்போது நீர் குட்டை அருகே 4 கரடிகள் ஒன்று சேர்ந்து பெண் ஓநாய் ஒன்றைக் கடித்துக் குதற ஆரம்பித்தன. இதனைக் கண்ட மற்ற ஓநாய்கள் கரடிகளிடம் இருந்து அந்த ஓநாயை காப்பற்ற முயன்றன.

மற்ற ஓநாய்கள் அந்த கரடிகளை தாக்கவும் செய்தன. ஆனால் ஓநாய்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இறுதியில் அந்த கரடிகள் பெண் ஓநாயை கடித்துக் கொன்றன. இந்த காட்சிகளை பார்வையாளர்கள் நேரில் கண்டதால் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். டைரன்ரிஜ்க் உயிரியல் பூங்காவில் இந்த விலங்குகள் ஒரு ஆண்டுக்கு மேலாக ஒரே இடத்தில் வாழ்ந்வை எனவும் இது போன்ற சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை எனவும் உயிரியல் பூங்கா அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : death ,zoo ,visitors ,Netherlands , wolf,death,visitors,zoo,bears,attack,Netherlands
× RELATED அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சம்மர் கேம்ப்