×

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம், கார்த்திக் சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு

டெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்தை கைது செய்ய நவம்பர் 26 வரை டெல்லி நீதிமன்றம்  தடை விதித்தது. ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு விசாரணையை 26ம் தேதிக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.  கடந்த 2006ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஏர்செல்-மேக்சிஸ்  நிறுனவத்துக்கு முறைகேடாக ரூ.305 கோடி நேரடி வெளிநாட்டு முதலீடு பெறுவதற்கான அனுமதி வழங்கியதாகவும், இதற்காக சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் லஞ்சம் பெற்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது பற்றி சிபிஐ.யும், மத்திய அமலாக்கப் பிரிவும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்த வழக்கில் சிதம்பரம் உட்பட 9 பேரை குற்றவாளியாக சேர்த்து, அமலாக்கப் பிரிவு சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.      இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ ஒரு முறையும், அமலாக்கத் துறை அதிகாரிகள் நான்கு முறையும்  விசாரித்துள்ளனர். இதில், சிதம்பரத்திடமும், கார்த்தி சிதம்பரத்திடமும் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகையும், ஒரு துணை குற்றப்பத்திரிகையும் கடந்த ஜூலையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்த பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றம், அவரை நவம்பர் 1ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து கடந்த மாதம் 25ம் தேதி உத்தரவிட்டது. இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்தை கைது செய்ய நவம்பர் 26 வரை தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Aircel ,Maxis ,P. Chidambaram ,Kartik Chidambaram , Aircel-Maxis case, P. Chidambaram, Karthik Chidambaram, arrested, Delhi court
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...