×

திருப்பதி கோயில் பகுதியில் பிளாஸ்டிக் பயன்படுத்த இன்று முதல் தடை: மீறினால் ரூ25 ஆயிரம் வரை அபராதம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பகுதியில் பிளாஸ்டிக் பயன்படுத்த இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகப்புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இங்கு பக்தர்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக்  குப்பைகளை திருமலை அருகே உள்ள சேஷாச்சலம் வனப்பகுதி காக்குல கொண்டாவில் குவிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது. இதனால்  வனப்பகுதியில் கடுமையான சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு திருமலையில் பெய்யும் மழையின் அளவு குறைந்து நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று முதல் திருமலையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த திருமலை- திருப்பதி தேவஸ்தானம் தடை விதித்துள்ளது. திருமலையில் உள்ள  கடைகள், ஓட்டல்களில் உணவுப் பொருட்கள் மற்றும் பொம்மைகள் பிளாஸ்டிக் பையில் அடைத்து விற்பனை செய்யக்கூடாது. தடையை மீறினால் ரூ5 ஆயிரம் முதல் ரூ25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும். இதற்கு பக்தர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : area ,Tirupati temple , Tirupati temple, plastic, barrier, violation, fine
× RELATED குஜராத் ராஜ்கோட் பகுதியில் வணிக வளாக...