×

சூப்பர் சிக்ஸ் ஹாக்கி லீக் ஐஓபி அணி சாம்பியன்

சென்னை: சூப்பர் சிக்ஸ் ஹாக்கி லீக் தொடரில் ஐஓபி அணி சாம்பியன் பட்டம் வென்றது.சென்னை ஹாக்கி சங்கம், ஸ்ரீராம் நிறுவனம் இணைந்து 55வது டிவிஷன் ஹாக்கி போட்டியை நடத்தின. அக்டோபர் முதல் வாரத்தில் லீக் போட்டிகள் நடைபெற்றன. அதில் சென்னை மாநகர காவல்துறை, தெற்கு ரயில்வே, தமிழ்நாடு காவல்துறை, மத்திய கலால், வருமான வரித்துறை, சென்னை துறைமுகம், ஏபிஎம் இன்ஃபோடெக், இந்தியன் வங்கி, ஏஜிஎஸ், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஐசிஎப், இந்திராகாந்தி நினைவுக்குழு, இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) ஆகிய அணிகள் பங்கேற்றன.இதில் ஏ பிரிவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, மத்திய கலால், இந்தியன் வங்கி, பி பிரிவில் ஐசிஎப், தெற்கு ரயில்வே, இந்திய விளயைாட்டு ஆணையம் ஆகிய 6 அணிகள் சூப்பர் சிக்ஸ் போட்டிக்கு தகுதிப்பெற்றன.சூப்பர் சிக்ஸ் போட்டிகள் 2 வார இடைவெளிக்கு பிறகு அக்.21ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் சூப்பர் சிக்ஸ் சுற்றின் கடைசி போட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) - இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (சாய்) அணிகள்  நேற்று மோதின. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ஐஓபி சார்பில் செந்தில் கிருஷ்ணன் (25வது நிமிடம்), சாய் அணி சார்பில் ஷண்முகவேல் (56வது நிமிடம்) கோல் போட்டனர். புள்ளிக் கணக்கில் முதலிடம் பிடித்த ஐஓபி அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. அந்த அணிக்கு முதல் பரிசாக ₹80.000 வழங்கப்பட்டது.

சிறந்த கோல் கீப்பராக சாய் அணியின் நிஜாமுதீன் ஷாபாஸ், சிறந்த தற்காப்பு வீரராக நம்பி கணேஷ் (தெற்கு ரயில்வே), நடுகள வீரராக தணுஷ் (ஐசிஎப்), முன்கள வீரராக வீர தமிழன் (சாய்) ஆகியோர் விருது பெற்றனர். தொடர் நாயகன் விருதை சென்ட்ரல் எக்சைசின் சதீஷ் தட்டிச் சென்றார். நம்பிக்கை நட்சத்திரமாக இந்திரா காந்தி நினைக்குழு வீரர் மவுனீஷ் தேர்வு பெற்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Super Six Hockey League IOP Team , Super,Six Hockey, League ,IOP ,Team Champion
× RELATED ஐபிஎல் 2024: சென்னை – ராஜஸ்தான் அணிகள்...