×

தர்மபுரி சாலை விரிவாக்க பணிக்காக சாமி சிலைகளை அகற்ற கிடா வெட்டி பரிகார பூஜை

தர்மபுரி: தர்மபுரி -சேலம் மெயின் ரோட்டில் இலக்கியம்பட்டி பஸ் ஸ்டாப் அருகே சாலை மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு அருகில் சுமார் 6 அடி உயரத்தில் 2 குதிரை, துப்பாக்கியுடன் காவலர் மற்றும் அம்மன் சிலை, நாகர் சிலைகள் இருந்தது. அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் சாலையை விரிவுபடுத்த நெடுஞ்சாலைத்துறையினர் மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான குதிரை, காவலர், நாகர், மாரியம்மன் சிலைகளை நேற்று பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டி எடுத்தனர். பின்னர்,கிரேன் மூலம் அவை அகற்றப்பட்டது.

அகற்றப்பட்ட சிலைகளை இலக்கியம்பட்டி ஏரிக்கரையோரம் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.  சிலைகளை அகற்றுவதற்கு முன்பாக தர்மபுரி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை மாரியம்மனுக்கு ஆடு வெட்டி, நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. பின்னர், அகற்றப்பட்ட சிலைகள் அருகே யாகம் நடந்தது. இதையடுத்து, ஒன்றன் பின் ஒன்றாக சிலைகள் அகற்றப்பட்டது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dhirapuri ,ridge ,Samy , Dharmapuri, road expansion work, kita cut and pirakara puja
× RELATED திருத்தணி முருகன் கோயிலில் ஆந்திர அமைச்சர் ரோஜா சாமி தரிசனம்