×

நாட்டின் ஒற்றுமைக்காக மோடி போராடி வருகிறார்: நிர்மலா சீதாராமன் ேபட்டி

சென்னை: நாட்டின் ஒற்றுமைக்காக பிரதமர் மோடி போராடி வருகிறார் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் தேசிய ஒற்றுமை தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னையில் நேற்று தேசிய ஒற்றுமைதின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும்   தொடர் ஓட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு  மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைைம வகித்தார். நகராட்சி நிர்வாக மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜயகுமார், ஜெயவர்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்பிறகு அனைவரும் இணைந்து ஒற்றுமை தின உறுதி மொழி எடுத்துக் கொண்டார். பின்பு இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட தொடர் ஓட்டத்தை தொடங்கிவைத்தனர். இதன்பிறகு அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சர்தார் வல்லபாய் படேல் விவசாயிகளுக்காக பாடுபட்டவர். 60 வருடங்களாக அவருடைய பெருமைகளை சிறிது சிறிதாக குறைத்து விட்டு அவருக்கு பெருமை சேர்த்ததாக கூறுகின்றனர். ஒவ்வொரு வருடமும் அவரின் பிறந்த தினத்தை எளிமையாக கொண்டாடி வந்தனர்.

ஆனால் தற்போது பிரதமர் மோடி தலைமையிலான அரசு சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினத்தை மிகச் சிறப்பாக கொண்டாட முடிவு செய்து, அதன்படி நாடு முழுவதும் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகளிடம் இருந்து சிறுக சிறுக இரும்பு பெற்று உருவாக்கப்பட்ட மிகப்பெரிய படேல் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்திருக்கிறார். நாடு ஒற்றுமையாக இருக்க இளைய சமுதாயம் ஒன்று சேர வேண்டும். மோடி பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்தே நாட்டின் ஒற்றுமைக்காக போராடி வருகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,country ,Nirmala Seetharaman , Modi, Nirmala Seetharaman
× RELATED பிரதமர் மோடி தலைமையில் மத்தியில்...