×

வால்பாறையில் 40 நாட்களுக்கு முன்பே காபி சீசன் துவங்கியது

வால்பாறை:  வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் தேயிலை, காபி, ஏலக்காய், மிளகு போன்ற விவசாயம் மட்டுமே உள்ளது. மொத்தம் 32 ஆயிரத்து 825 ஏக்கரில் விவசாய பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது. இதில் காபி 4 ஆயிரத்து 517 ஏக்கர் பயிரிடப்பட்டுள்ளது. தேயிலை 25 ஆயிரத்து 253 ஏக்கரும், ஏலம் 2 ஆயிரத்து 906 ஏக்கர் பரப்பளவிலும் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பருவநிலை மாற்றத்தால் தற்போது காபி செடிகளில் முன்கூட்டியே காய் பிடித்தும், சில தோட்டங்களில் காய்கள் பழுத்தும் உள்ளன.

இதுகுறித்து காபி விவசாயி உத்தமராஜ் கூறுகையில், வால்பாறை பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள காபி செடிகளில் 40 நாட்களுக்கு முன்பாகவே மகசூல் வந்துள்ளது. டிசம்பர் மாதம் துவங்க வேண்டிய காபி  சீசன் தற்போதே துவங்கி விட்டது. பருவநிலை மாற்றம் காரணமாகவும், மழையும் முன்கூட்டியே பெய்ததால் தற்போது காபி தோட்டங்களில் காய்கள் பிடித்துள்ளது.  தற்போது அரபிக்கா வகை காபி கிலோ ரூ. 100 முதல் 120 வரையும், ரொபஸ்டா வகை ரூ. 60 முதல் 80 வரையும் உள்ளது, என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Coffee season ,Valparai , Valparai, coffee, season
× RELATED கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது