கொலை திட்டம் தீட்டியபோது துப்பாக்கி முனையில் 4 ரவுடிகள் கைது: காசிமேட்டில் பரபரப்பு

சென்னை: காசிமேடு காசிபுரம் ‘ஏ’ பிளாக் பகுதியில் வசித்து வந்தவர் தேசப்பன் (32). பிரபல ரவுடியான இவர் மீது காசிமேடு, மீன்பிடி துறைமுகம், ராயபுரம் காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. குற்ற வழக்குகளில் சிக்கி 13 முறை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர். கொலை வழக்கு ஒன்றில் ஜாமீனில் வெளியே வந்த தேசப்பன் தலைமறைவானார். இந்நிலையில், காசிமேடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இவர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், ராயபுரம் போலீஸ் உதவி கமிஷனர் கண்ணன் தலைமையில், காசிமேடு இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் உள்ளிட்ட தனிப்படையினர் அந்த வீட்டை சுற்றிவளைத்து, உள்ளே இருந்த தேசப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள் கவுதம் (28), வேலுமணி (30), சக்திவேல் (32) ஆகிய 4 ரவுடிகளை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், அப்பகுதியை சேர்ந்த ஒருவரை கொலை செய்ய திட்டம் தீட்டிவந்தது தெரிந்தது.

* பேஸ்புக் மூலம் பழகி ராயபுரத்தை  சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திய காசிமேடு பல்லவன்  பகுதியை சேர்ந்த முருகன் (23) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார்  கைது செய்தனர்.

* போரூர் வயர்லஸ் ஸ்டேஷன் ரோடு பகுதியை  சேர்ந்த செல்வம் (40) என்பவர் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள்,  பீரோவில் இருந்த  25 சவரன் நகை மற்றும் ₹50 ஆயிரத்தை கொள்ளையடித்து  சென்றனர்.

* சின்ன மாங்காடு பகுதியை சேர்ந்த  கண்ணன் (57) என்பவர், குடும்ப தகராறில் மனமுடைந்து பேரூர்  ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

* சித்தாலப்பாக்கத்தை சேர்ந்த நாதாநியல்  (28). ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரி. இவர் தனது குடியிருப்பின் மொட்டை மாடியில் உள்ள இரும்பு படிக்கட்டில் தூக்கிட்டு தற்கொைல செய்து  கொண்டார்.

* ஈக்காட்டுதாங்கல் கலைமகள் நகரை சேர்ந்தவர் பொன்மணி (86). இவரது வீட்டில் திண்டுக்கல் பகுதியை சேர்ந்த சாந்தி (40) என்பவர் தங்கி வேலை செய்து வந்தார். நேற்று வீட்டில் இருந்த 40 பவுன் தங்க நகைகள், ₹50 ஆயிரம் மாயமானது. சாந்தியும் திடீரென மாயமானது தெரிந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>