புதுடெல்லி1: டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் வெளியே செல்லாமல் வீடுகளிலேயே இருக்கும்படியும், வீட்டின் உள்ளே காற்றின் தரம் மோசமாகாமல் தடுக்க ஊதுவத்தி, மெழுகுவர்த்தி, விறகுகள் போன்றவற்றை எரிக்க வேண்டாம் என்று அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்து வருகிறது. குளிர்காலம் தொடங்கி விட்டதால், காற்றில் மிதக்கும் நுண் தூசியும் அதிகரித்து வருகிறது. மேலும், அண்டை மாநிலங்களில் அறுவடை முடிந்த வயல்வெளிகளில் காய்ந்த பதர்களுக்கு தீ வைப்பதால் எழும் புகைமூட்டம் டெல்லியில் சூழ்வதால் நிலைமை மேலும் மோசமடைந்து வருகிறது. ஏற்கனவே வயல்வெளிகளில் தீ வைக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருந்தாலும் விவசாயிகள் அதை கேட்பதாக தெரியவில்லை.
இந்நிலையில் நேற்று டெல்லியில் இந்த குளிர்கால சீசனில் முதல் முறையாக, காற்றின் தரம் மிக மோசமான நிலைக்கு சென்றது. காற்றின் தரக்குறியீடு 410 புள்ளிகளாக பதிவானது. இது மிக மோசமான அளவை குறிப்பதாகும். அதாவது நுண் துகள் தூசிகளின் அளவு அதிகமாக இருப்பதை இது காட்டுகிறது. எனவே பொதுமக்கள் முகத்தில் முகமூடி அணியாமல் வெளியே வர வேண்டாம் என்றும், முடிந்த அளவுக்கு வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்த்து வீட்டிற்குள்ளே இருக்கும்படியும் மக்கள் அறிவுறுத்தப்பட்டனர். காற்றுக்காக ஏசியை பயன்படுத்திக் கொள்ளும்படியும், வீட்டில் காற்றின் தரத்தை பராமரிக்க விறகுகள், மெழுகுவர்த்திகள் உள்பட எதையும் எரிக்க வேண்டாம். பூஜையின் போது ஊதுபத்தி கூட ஏற்ற வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி