×

மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லையா? தம்பிதுரைக்கு தமிழகத்தை பற்றியும், மத்திய அரசைப் பற்றியும் தெரியவில்லை: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என சொல்லும் தம்பிதுரைக்கு தமிழ்நாட்டை பற்றியும், மத்திய அரசை பற்றியும் தெரியவில்லை என பொன்.ராதாகிருஷ்ணன்  குற்றம் சாட்டினார்.தாம்பரம் சானடோரியத்தில் உள்ள  தேசிய சித்தா மருத்துவ நிறுவனத்தில் தூய்மை இந்தியா திட்டத்தில் இரு வார தூய்மை இந்தியா இயக்கம் நிறைவு விழாவில்  மத்திய இணை அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு தூய்மை பணிகளில் ஈடுபட்டார். தேசிய சித்த மருத்துவ மைய இயக்குநர் டாக்டர் பானுமதி, துணை இயக்குநர் முருகன், கண்காணிப்பாளர்  விசுவவேஸ்வரன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என சொல்லும் தம்பிதுரைக்கு தமிழ்நாட்டை பற்றியும் மத்திய அரசை பற்றியும் தெரியவில்லை. தெரிந்து கொள்வது நல்லது. தமிழக  அரசாங்கத்தை பற்றியும் மத்திய அரசாங்கத்தை பற்றியும் அவர் தெரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government ,state ,interview ,Thambidurai ,Ponnathirakrishnan ,Tamil Nadu , Does ,central government,Thambidurai ,Tamil Nadu and the federal government, Ponnathirakrishnan interview
× RELATED டெல்லியில் கடும் குடிநீர்...