×

சத்தீஸ்கரில் நக்சல்கள் தாக்குதல் : தூர்தர்ஷன் கேமராமேன் உள்ளிட்ட மூவர் பலி

தண்டேவாடா: சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் நக்சலைட்டுகளுடன் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் இரு பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் ஒருவரும் நக்சல்கள் தாக்குதலில் மரணமடைந்துள்ளார்.  சத்தீஸ்கர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நக்சல்கள் தொடர்ந்து ஊடுருவி வருகின்றனர். அவர்களுக்கு இந்திய பாதுகாப்புடைப்படையினர் மற்றும் சத்தீஸ்கர் போலீசார் இணைந்து தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர். சத்தீஷ்கர் மாநிலத்தில் வரும் நவம்பர் 12 மற்றும் 20 ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில்தண்டேவாடா அருகேயுள்ள அரான்பூரில் ஊடுருவிய நக்சலைட்டுகள், அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற தூர்தர்ஷன் குழுவினர் மற்றும் அவர்களுடன் சென்ற பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு வீரர்களும் துப்பாக்கியால் சுட்டனர். இருப்பினும் நக்சல் தாக்குதலில் தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் ஒருவரும், 2 பாதுகாப்பு படை வீரர்களும் உயிரிழந்தனர்.  இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான நிலை உருவாகியுள்ளது. இதை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : attack ,Chhattisgarh ,Doordarshan ,cameraman , Doordarshan TV, cinematographer, Naxalites, attack
× RELATED சத்தீஸ்கர் அருகே துப்பாக்கி வெடிமருந்து ஆலை விபத்தில் ஒருவர் பலி..!!