×

ஜிஎஸ்டி-யால் பட்டுசேலைகளின் விலை உயர்வு: ஆரணியில் பட்டுப்புடவைகளின் விற்பனை முடக்கம்

திருவண்ணாமலை: ஜிஎஸ்டி போன்ற வரியினால் பட்டுசேலைகளின் விலை உயர்வு காரணமாக ஆரணியில் 2 லட்சம் பட்டுப்புடவைகள் தேக்கம் அடைந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். காஞ்சிபுரத்திற்கு நிகராக ஆரணியில் தயாரிக்கப்படும் கைத்தறி பட்டுப்புடவையும் சிறப்பு தன்மை வாய்ந்ததாக உள்ளது. ஆனால் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், எதிர்பார்த்தபடி பட்டுப்புடவை விற்பனை ஆகாததால் உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆரணி சுற்றுவட்டாரத்தில் இதனை நம்பி இருக்கின்ற 50,000 நெசவாளர் குடும்பங்கள் வேலை இழக்கும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு காரணம் பட்டுபுடவைகள் மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியே என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பட்டுபுடவைகளுக்கு மட்டுமின்றி இதன் மூலப்பொருட்களான ஜரிகை போன்றவற்றிற்கும் தனித்தனியாக  ஜிஎஸ்டி விதிக்கப்படுவதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே நெசவாளர்கள் நலன் கருதி பட்டுபுடவைகளுக்கான வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : PST , Arani,pattuputavaikal,sale,freezing
× RELATED தமிழ்நாட்டின் நிதிநுட்ப நகரத்தைக்...