×

கருங்கல் அருகே பாலப்பணி தரம் குறைந்ததாக குற்றச்சாட்டு : சாலை பணியாளர்களை திருப்பி அனுப்பிய பொதுமக்கள்

கருங்கல்: கருங்கல் மார்த்தாண்டம் சாலையில், மழைநீர் வடிகால் ஓடை பாலம் பழுதடைந்திருந்ததால் மாற்றுப்பாலம் அமைக்க ரூ. 5 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் டென்டர் விடப்பட்டது. இதற்கான பணி கடந்த 15 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. சாலையில் இருந்த கற்களால் ஆன பாலம் அகற்றப்பட்டு சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் கருங்கல் மார்த்தாண்டம் சாலையில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டு, பாலூர் மூசாரி வழியாக வாகனங்கள் சுற்றி வருகின்றன. இதனால் அவ்வப்போது போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிய பாலத்தில் கடந்த 5 நாட்களுக்கு முன் கான்கிரீட் அமைத்தனர். ஆனால் 5 நாட்களாகியும் தண்ணீர் நனைக்கவில்லை.

வழக்கமாக கான்கிரீட் அமைத்த மறுநாள் முதல் 15 நாட்கள் பாத்தி கட்டி தண்ணீர் தேக்கி வைக்க வேண்டும். இதற்கிடையே பொதுமக்கள் பாலத்திற்கு இருபக்கமும் பலகைகளை வைத்து இருசக்கர வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் நேற்று சாலை பணியாளர்கள்  தண்ணீர் நனைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதைக்கண்ட பொதுமக்கள் கொதிப்படைந்து ஒப்பந்ததாரர் நிறுவனத்திற்காக சாலை பணியாளர்கள் எப்படி பணிபுரியலாம் எனகேட்டு அவர்களை திருப்பி அனுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் மேற்பார்வையில் செய்ய வேண்டிய பணிகளை முறையாக செய்யாமல் தரம் குறைவாக செய்துள்ளனர் என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Granada ,road staff , karungal, bridge, public
× RELATED சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்