×

சபரிமலையில் இளம்பெண்கள் செல்வதற்கு எதிராக போராடிய தந்திரி உறவினர் ராகுல் ஈஸ்வர் மீது இளம்பெண் ‘மீ டூ’ புகார்

திருவனந்தபுரம்: ஐயப்ப தர்மசேனா தலைவர் ராகுல் ஈஸ்வர் தன்னை வீட்டில் வைத்து ஆபாச படம் காண்பித்து பலாத்காரம் செய்ய முயன்றதாக இளம்பெண் ஒருவர் ‘மீ டூ’ புகார் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சபரிமலை தந்திரியின் குடும்பத்தைச் சேர்ந்தவர் ராகுல் ஈஸ்வர் (35). ஐயப்ப தர்ம சேனா தலைவரான இவர் சபரிமலையில் இளம் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகிறார். கடந்த 18ம் தேதி பம்பையில் இவர் தனது ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்தினார்.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர். இந்நிலையில் ராகுல் ஈஸ்வர் மீது ‘மீ டூ’ புகார் எழுந்துள்ளது அடுத்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மலையாளத்தில் ‘இஞ்சி பெண்’ என்ற பேஸ்புக் கணக்கு உள்ளது. இதில் கடந்த சில தினங்களுக்கு ஒரு மலையாள நடிகை, பிரபல நடிகர் அலன்சியர் மீது ‘மீ டூ’ புகார் கூறியிருந்தார். அதே பேஸ்புக் கணக்கில் ஒரு இளம்பெண் ராகுல் ஈஸ்வர் மீது ‘மீ டு’ புகார் கூறியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த 2003-04ம் வருடத்தில் நான் 12ம் வகுப்பு தேர்வாகி இருந்தேன். அப்போது ராகுல் ஈஸ்வர் டிவிக்களில் பெண் சமத்துவம் குறித்தும், ஆண் பெண் உறவுகள் குறித்தும் பேசுவார்.
அவரது பேச்சு எனக்கு பிடித்திருந்தது. பிறகு ஒரு நண்பர் மூலம் ராகுல் ஈஸ்வருடன் பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி நேரில் சந்தித்து சமூக கலாச்சாரம் குறித்து பேசிக்கொள்வோம். இந்நிலையில் ஒரு நாள் அவர் என்னை தனது வீட்டிற்கு வரும்படி அழைத்தார். நானும் அவரது வீட்டுக்கு சென்றேன். வீட்டில் ஒவ்வொரு அறையாக காண்பித்தார்.  படுக்கை அறைக்கு சென்ற அவர் டிவியில் ஆபாச படத்தை காண்பித்தார். பின்னர் அறையில் வைத்து என்னை கட்டிபிடித்து பலாத்காரம் செய்ய முயன்றார். நான் சிரமப்பட்டு வெளியே ஓடிவந்தேன்.

இப்போது ராகுல் ஈஸ்வர் குறித்து பரபரப்பாக பேசுகிறார்கள். இதனால் எனக்கு பழைய சம்பவங்கள் நினைவுக்கு வருகிறது. அவரது பேச்சிலும், நடவடிக்கையிலும் எனக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் உண்மையாகத்தான் பேசுகிறாரா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இதனால் தான் அப்போது நடந்த சம்பவத்தை இப்போது நான் கூறுகிறேன்.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து ராகுல் ஈஸ்வர் கூறுகையில், ‘‘என் மீது  கூறப்பட்ட புகாரில் எந்த உண்மையும் இல்லை. 15 ஆண்டுகளுக்கு முன் நடந்த  சம்பவம் என்று அந்த பெண் கூறியுள்ளார். அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை  என்று என்னால் எப்படி நிரூபிக்க முடியும்? இது என் பெயருக்கு களங்கம்  ஏற்படுத்த வேண்டும் என்பதற்கு திட்டமிட்ட சதியாகும்’’ என்றார்.

தந்திரி குடும்பவாரிசல்லசபரிமலை தந்திரி கண்டரர் மோகனர் கூறியது: சபரிமலை கோயில் ஆச்சாரங்களை பற்றி கூறுவதற்கு ராகுல் ஈஸ்வருக்கு எந்த உரிமையும் இல்லை. அவர் கூறுவது அனைத்தும் தந்திரி குடும்பத்தின் கருத்து என பலரும் கருதுகின்றனர். சட்டப்படி ராகுல் ஈஸ்வருக்கு சபரிமலையுடனோ, தந்திரி குடும்பத்துடனோ தொடர்பில்லை. அவர் தந்திரி குடும்பத்தின் வாரிசும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : teenager ,tantri ,Rahul Iswar ,girls ,Sabarimala , Sabarimala, young women, Rahul Iswar, young woman, m to
× RELATED திருமங்கலம் அருகே முன்விரோதத்தில்...