×

2வது ஊழல் வழக்கில் கலீதா ஜியாவுக்கு ஏழு ஆண்டு சிறை

தாகா:  வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவிற்கு மற்றொரு ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா (73). இவர் தனது பதவிக்காலத்தின்போது கணவரின் பெயரில் இயங்கி வரும் அறக்கட்டளைக்கு வௌிநாடுகளில் இருந்து முறைகேடாக நன்கொடை பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி 8ம் தேதி கலீதா ஜியாவிற்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே, ஊழல் தடுப்பு ஆணையம் மூலமாக கடந்த 2011ம் ஆண்டு கலீதா ஜியா மீது மற்றொரு வழக்கு தொடரப்பட்டிருந்தது. தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஜியா அறக்கட்டளைக்கு நிதி ேசர்த்ததாக தொடரப்பட்ட இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது அக்தரருசமான், கலீதா ஜியாவிற்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kalita Zia , 2nd scam, Khalita Jia, jail
× RELATED வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா...