தேர்தல் அறிக்கைக்கு மக்கள் கருத்து கேட்க இணையதளம் காங். துவக்கம்

புதுடெல்லி: மக்களவை தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய விஷயங்கள் தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்க, காங்கிரஸ் கட்சி இணையதளம் தொடங்கி உள்ளது. இதற்கான தொடக்கவிழா டெல்லியில் நேற்று நடந்தது. இதுதவிர manifesto@inc.in என்ற இமெயில் முகவரியிலும், 7292088245 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ராகுல் காந்தி அளித்த பேட்டி, ‘‘மக்கள் கருத்துப்படி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை உள்ளடக்கிய வளர்ச்சி திட்டங்களை கொண்டதாக இருக்கும்’’ என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>