×

ஏடிஎம் நிறுவனர்கள் கைதுக்கு பிறகு பிட்காயின் வாங்குவோர் உஷார்

* உலகின் பல்வேறு நாடுகளில் பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகள் பிரபலம்.
* இந்திய வங்கிகள் பிட்காயின் பரிவர்த்தனைக்கு அனுமதி மறுத்த பிறகு, ஏடிஎம்களே சரியான மாற்று வழி எனக்கருதி, கிரிப்டோ கரன்சி ஏடிஎம்களை நிறுவியுள்ளனர்.
* இந்தியாவில் வங்கிகளுக்கு ஏடிஎம் இயந்திரம் தயாரிக்கும் நிறுவனங்களே, கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைக்கு ஏற்ற ஏடிஎம்களை உருவாக்கி தந்துள்ளன.
* வங்கிகள் அனுமதி இல்லாததால், ஏடிஎம் கார்டு பயன் படுத்த முடியாது. ஆனால், ரொக்கமாக ஏற்கும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டன.
* வெளிநாடுகளில் வணிக வளாகங்கள், விமான நிலையங்களில் பிட்காயின் ஏடிஎம்கள் உள்ளன.

புதுடெல்லி: பெங்களூருவில் பிட்காயின் ஏடிஎம் நிறுவியவர்கள் கைது செய்யப்பட்ட பிறகு, இந்தியாவில் பிட்காயின் பரிவர்த்தனை செய்வோர் மத்தியில் திடீர் எச்சரிக்கையையும் பீதியையும் கிளப்பியுள்ளது.  பிட்காயின் எனப்படும் கிரிப்டோ கரன்சிகள் சில நாடுகளில் பரிவர்த்தனை செய்யப்படுகின்றன. உருமற்ற, டிஜிட்டல் வடிவிலான இந்த நாணயங்களை இணையதளத்தில் மட்டுமே வாங்கவோ விற்கவோ முடியும். இதற்கென ஏடிஎம்களும் உள்ளன. இந்தியாவில் இவை தடை செய்யப்பட்டுள்ளது.  பிட்காயின் வாங்க, விற்க வங்கி கணக்குகளை பயன்படுத்தவும் முடியாது. இவ்வளவு தடைகள் இருந்தும் பல மடங்கு சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் இந்தியாவில் உள்ள பணக்காரர்கள் சிலர் இதில் முதலீடு செய்துள்ளனர். தடையை மீறி சில ஏஜென்சிகள் சட்டவிரோதமாக இவற்றை பரிவர்த்தனை செய்ய உதவுகின்றன.

இந்நிலையில் பெங்களூருவில் பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சியான யூனோகாயின் பரிவர்த்தனை ஏடிஎம் சில நாட்கள் முன்பு அமைக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.  இந்நிலையில் பிட்காயின் ஏடிஎம் நிறுவிய ஹரிஷ், சாத்விக் விஸ்வநாதன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதன்பிறகு இந்தியாவில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்த சிலரது நம்பிக்கையையும் இது தகர்த்து விட்டது. இதனால் முதலீட்டாளர்களக் பீதியும், கலக்கமும் அடைந்துள்ளனர். தங்கள் மீதும் சட்ட நடவடிக்கை வருமோ என்ற அச்சம் அவர்களை தொற்றிக் கொண்டுள்ளது.

 இதனால், பிட்காயினில் முதலீடு செய்வதா வேண்டாமா என்ற குழப்பத்துக்கும் தவிப்புக்கும் அவர்கள் ஆளாகியுள்ளனர். சிலர் முன்னெச்சரிக்கையாக தங்களை காத்துக்கொள்ளும் வழிமுறைகளை ஆராய தொடங்கி விட்டனர் என பிட்காயின் பரிவர்த்தனை செய்வோர் வட்டாரத்தில் கூறப்படுகிறது.  பிட்காயின் பரிவர்த்தனைக்கு இந்திய வங்கிகள் அனுமதி அளித்தன. இதை தடை செய்த பிறகு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை இந்திய பணமாக மாற்றவோ, புதிதாக முதலீடு செய்யவோ முடியவில்லை. சிலர், வெளிநாடுகளில் நண்பர்கள், உறவினர்கள் மூலம் பரிவர்த்தனை செய்கின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bitcoin buyers ,ATM ,founders , Bitcoin,ATM founders ,arrested
× RELATED கிருஷ்ணகிரியை அடுத்த...