×

சுவிஸ் உள்ளரங்கு டென்னிஸ் 9வது முறையாக பெடரர் சாம்பியன்

பாசெல்: சுவிஸ் உள்ளரங்கு ஏடிபி டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், உள்ளூர் நட்சத்திரம் ரோஜர் பெடரர் 9வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் ரோமானியாவின் மாரியஸ் கோபிலுடன் (93வது ரேங்க்) மோதிய பெடரர் 7-6 (7-5), 6-4 என்ற நேர் செட்களில் வென்று 9வது முறையாக இந்த தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இப்போட்டி 1 மணி, 34 நிமிடத்துக்கு நீடித்தது. பெடரர் இதுவரை 99 தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் அவர் தனது 100வது பட்டத்தை வென்று சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Swiss Indoor Tennis 9th Federer Champion , Swiss indoor, tennis, Federer champion
× RELATED டி20 வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை...