×

எல் கிளாசிகோ மோதல் சுவாரெஸ் ஹாட்ரிக்கில் பார்சிலோனா அபாரம்

பார்சிலோனா: ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில், பார்சிலோனா அணி 5-1 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தியது. பார்சிலோனா - ரியல் மாட்ரிட் அணிகள் மோதும் கால்பந்து போட்டிகள் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது வழக்கம். லா லிகா சாம்பியன்ஷிப்பில் எல் கிளாசிகோ என்று பிரபலமாகி உள்ள இந்த போட்டி, பார்சிலோனாவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி காயம் காரணமாக ஓய்வெடுத்து வரும் நிலையில், பார்சிலோனா அணிக்கு இப்போட்டி மிகப் பெரிய சவாலாக கருதப்பட்டது. எனினும், தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய அந்த அணி, இடைவேளையின்போது 2-0 என முன்னிலை வகித்ததுடன் ஆட்ட நேர முடிவில் 5-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது.

பார்சிலோனா சார்பில் லூயிஸ் சுவாரெஸ் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார் (30வது, 75வது, 83வது நிமிடம்). கோடின்யோ (11’), விடால் (87’) தலா ஒரு கோல் போட்டனர். ரியல் மாட்ரிட் அணிக்கு மார்செலோ 50வது நிமிடத்தில் ஆறுதல் கோல் அடித்தார். கிறிஸ்டியானோ ரொனால்டோ வெளியேறிய பின்னர் ரியல் மாட்ரிட் அணி வெற்றிகளைக் குவிக்க முடியாமல் தடுமாறி வருவது குறிப்பிடத்தக்கது. 10 லீக் ஆட்டங்களின் முடிவில் பார்சிலோனா 21 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அலாவெஸ் (20), செவில்லா (19), அத்லெடிகோ மாட்ரிட் (19) அணிகள் அடுத்த இடங்களில் உள்ள நிலையில், ரியல் மாட்ரிட் (14) 9வது இடத்தில் பின்தங்கியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : El Klassico Confrontation Barcelona ,Suarez , El Claccio, Claire, Barcelona at Suarez Hatcher, clinch
× RELATED கால்பந்து நட்சத்திரம் சுவாரெசுக்கு கொரோனா