×

இலங்கையில் நேற்று நடந்த துப்பாக்கி சூடு சம்பவம்: முன்னாள் அமைச்சர் அர்ஜுனா ரனதுங்காவை விடுதலை செய்தது கொழும்பு நீதிமன்றம்

கொழும்பு: இலங்கையில் நேற்று நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக, கிரிக்கெட் முன்னாள் கேப்டன் மற்றும் அமைச்சராக இருந்த அர்ஜுனா ரனதுங்கா கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.  இலங்கையில் அதிரடியாக பிரதமரை மாற்றிய அதிபர் மைதத்ரிபால சிறிசேனா ராஜபக்சேவை பிரதமராக நியமித்துள்ளார். இந்நிலையில், இலங்கை பெட்ரோலிய வளத்துறை அமைச்சர்  அர்ஜூனா ரணதுங்க அலுவலகத்தில் இருந்து அமைச்சரின் பாதுகாவலர்கள் நேற்று மாலை சில கோப்புகளை கொண்டு செல்ல வந்தனர்.

அங்கிருந்த சில ஊழியர்கள் அர்ஜூனா ரணதுங்கவை சிறைப்பிடிக்க முயற்சித்தாக கூறப்படுகிறது. அப்போது இரு தரப்பினருக்கு இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால்  ஆவேசம் அடைந்த அமைச்சரின் பாதுகாவலர்கள் ஊழியர்களை நோக்கி துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர். இதில் காயமடைந்த 3 ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில்  ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார். மேலும் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், பாதுகாவலர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஊழியர் ஒருவர் பலியானது தொடர்பாக பெட்ரோலிய துறை முன்னாள் மந்திரி அர்ஜூனா ரணதுங்கவை போலீசார்  இன்று கைது  செய்தனர்.  இலங்கையில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலையில், முன்னாள் மந்திரி அர்ஜூனா ரணதுங்க கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அர்ஜூனா ரணதுங்காவை ரூ.5 லட்சம் ஜாமினில் கொழும்பு நீதிமன்றம்  விடுதலை செய்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sri Lankan ,Arjuna Ranadunga ,court ,gun firing incident ,Colombo , Sri Lanka, firing, former minister Arjuna Ranatunga, arrested and released
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை படை தாக்குதல்!