×

அமெரிக்காவில் 2017-ல் ஸ்டெம் கல்வி பயின்றவர்கள் 56% இந்திய மாணவர்கள் என தகவல்

வாஷிங்டன்: அமெரிக்காவில் 2017-ம் ஆண்டில் ஸ்டெம் கல்விக்கான விருப்ப நடைமுறை பயிற்சி மேற்கொண்டோரில் 56% பேர் இந்திய மாணவர்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் எஃப்.1 விசா மூலம் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் எனப்படும் ஸ்டெம் கல்வி பயிலும் மாணவர்கள், விருப்ப நடைமுறைப் பயிற்சி மூலம் ஓராண்டு விசாக் காலத்தை நீட்டித்து அங்கு பணிபுரிய முடியும் என்ற நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

இந்நிலையில் ஸ்டெம் கல்வி பயிற்சியை 2017-ம் ஆண்டில் மேற்கொண்டோரில் 50,507 பேர் இந்திய மாணவர்கள் என்றும், 21,705 பேர் சீன மாணவர்கள் என்று அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஸ்டெம் மூலம் பயிலும் மாணவர்கள் முன்னணி நிறுவனங்களாக அமேசான், கூகுள், இண்டெல், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை செய்துள்ளனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : United States ,stem educators ,Indian , America, Stem Education, Indian Students, Information
× RELATED வெளிநாடுகளில் இந்திய மாணவர்கள்...