×

சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை இன்று தொடக்கம்: கடைகள் அமைக்கும் பணிகள் தீவிரம்

சென்னை : சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பட்டாசு விற்பனை இன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தாமதம் ஏற்பட்டதற்கு காவல்துறை, தீயணைப்புத்துறை அனுமதி வழங்கவில்லை என விற்பனையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். சென்னை தீவுத்திடலில் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசுக் கடைகள் அமைக்கும் பணிகள் தாமதமாக நடைபெற்று வருகின்றன. கடைகள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்தவுடன், இன்று மாலை அல்லது நாளை முதல் பட்டாசு விற்பனை தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தீ விபத்து நடைபெறாமல் இருப்பதற்காக தீயணைப்புவண்டிகள், ஆம்புலன்ஸ் ஆகியவையும் தயாராக வைக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை நகரத்தை பொறுத்தவரை தீவுத்திடல், கோயம்பேடு, ராயப்பேட்டை, கொட்டிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 120 பட்டாசு கடைகள் அமைக்கப்படவுள்ளன.

குறிப்பாக தீவுத்திடலில் மொத்தம் 70 பட்டாசுக் கடைகள் மட்டுமே அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு நடவடிக்கைக்காக 90 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அதற்கான கட்டுப்பாடு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கடைகளுக்கும் 4 வாளிகள் மற்றும் தண்ணீர் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த முறை சிவகாசியில் தரமான கம்பெனிகளால் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் தீவுத்திடலுக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாகவும், வெளிமார்க்கெட்டை காட்டிலும் தீவுத்திடலில் 10 சதவீத சலுகையில் பட்டாசுகள் விற்பனை செய்யப்படும் எனவும் விற்பனையாளர் சங்கத் தலைவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பட்டாசு கடைகள் தாமதமாக ஆரம்பிக்கப்பட்டாலும் விற்பனை நல்ல முறையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai ,archipelago , Chennai,Fireworks Stores,Sales,Tasks
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?