×

கத்தார் விசாவில் அதிரடி மாற்றம்: முதலாளிகளின் அனுமதியின்றி தொழிலாளர்கள் சொந்த நாட்டிற்கு செல்லலாம்

டோஹா: கத்தாரில் வேலை செய்யும் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கள் முதலாளிகளிடம் அனுமதி பெற்றுவிட்டு தான் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற விதியை அந்நாட்டு அரசு நீக்கியுள்ளது. தொழிலாளிகளின் பாஸ்போர்ட்களை வைத்து கொள்ளும் முதலாளிகள் இந்த விதியை பயன்படுத்தி அவர்களை அடிமைகள் போல நடத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

தற்போது அதனை நீக்கி முதலாளிகளின் அனுமதி இல்லாமல் தொழிலாளர்கள் சொந்த நாட்டிற்கு செல்லலாம் என அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஐ.நா.வின் சர்வதேச தொழிலாளர் அமைப்புடன், சீர்திருத்தத்தை மேற்பார்வையிட மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டதில் இருந்து, இதுவரை வெளிவந்த அறிவிப்புகளில் முதலாளிகளிடம் அனுமதி பெறாமல் நாட்டை விட்டு வெளியேறலாம் என்ற அறிவிப்பே மிகப்பெரியதாகும்.

கத்தார் பல்கலைக்கழக சமூக மற்றும் பொருளாதார ஆய்வு நடத்திய ஆராய்ச்சி ஒன்றில் 53% வெளிநாட்டு தொழிலாளர்கள், தங்கள் முதலாளிகள், தங்களின் பாஸ்போர்ட்களை வைத்திருந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர். கத்தார் நாட்டில் சுமார் இரண்டு மில்லியன் வெளிநாட்டு தொழிலாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : country ,employers , Action,Qatar,Visa,Workers,native,country,permission,employers
× RELATED நாட்டின் ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ்...