×

திருவாடானை அருகே தொடர் மின்வெட்டால் குடிநீர் விநியோகம் பாதிப்பு : 30 கிராமத்தினர் கடும் அவதி

திருவாடானை: திருவாடானை அருகே 30 கிராமங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு பல மணி நேரம் நீடிப்பதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.  தொண்டியில் இருந்து திணையத்தூர், ஆண்டிவயல், அரும்பூர், திருவெற்றியூர், கொட்டகுடி, குளத்தூர் உட்பட 30 மேற்பட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த 15 நாட்களுக்கு மேலாக இக்கிராமங்களில் அறிவிக்கப்படாத பல மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது. குறிப்பாக பகல் முழுவதும் மின்சாரம் தடை செய்யப்படுகிறது. மாலை 6 மணி முதல் 9 மணி வரையும் மின்வினியோகம் தினசரி தடை செய்யப்படுகிறது.

தற்போது மின்வெட்டு அமலில் இல்லை என மின்வாரியம் கூறி வருகிறது. இருப்பினும் இப்பகுதியில் பல மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டால் மின்வெட் எல்லாம் ஒன்றுமில்லை. பழுது காரணமாக தான் மின்தடை ஏற்படுகிறது என்கின்றனர்.  ஆனால் பொதுமக்கள் தரப்பில் தினமும் பல மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது. இதை எப்படி பழுது என்று ஏற்றுக்கொள்ள முடியும். மின்வாரியத்தின் பாரபட்சமான நடவடிக்கையால் வேண்டுமென்றே எங்கள் கிராமங்களில் செயற்கையான மின்வெட்டை அமல்படுத்துகின்றனர் என புகார் கூறுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தொடர் மின்வெட்டால் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் விநியோகம் உரிய நேரத்தில் பம்பிங் செய்ய முடியாமல் பாதிக்கப்படுகிறது.

இதனால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது சில மணி நேரம் மின் வினியோகத்தை தடைசெய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், ஒவ்வொரு பகுதியிலும் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் தடை செய்வது வழக்கம். ஆனால் கடற்கரை பகுதிகளில் இறால் கம்பெனிகள் இருப்பதால் அந்த பகுதியில் தடை செய்யாமல் எங்கள் பகுதியில் மட்டும் முழுமையாக மின்தடையை செயற்கையாக உருவாக்குகின்றனர். இதனால் பகல் நேரங்களில் மின்விசிறி கிரைண்டர் மிக்ஸி போன்றவற்றை இயக்க முடியவில்லை. இரவு நேரத்தில் குழந்தைகள் முதியவர்கள் மின்தடையால் கொசுக்கடிக்கு ஆளாகி தூக்கத்தை இழந்து தவிக்கின்றனர். எனவே மாவட்ட அதிகாரிகள் எங்கள் பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு செய்யப்படாமல், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : villages ,Thiruvatanai , Tiruvatanai, drinking water, power cut
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் 636 வருவாய்...