×

கவர்னர் கிரண்பேடி வேண்டுகோள் புதுவை அரசிடம் டப்பு இல்லே... தன்னார்வலர்கள் நிதி தர வேண்டும்

திருக்கனூர்: புதுவை கவர்மெண்டில் டப்பு இல்லே. தன்னார்வலர்கள் நிதி வழங்க வேண்டும் என கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார். புதுச்சேரியை அடுத்த திருக்கனூர் அடுத்த சந்தை புதுக்குப்பம் வீடூர் அணையில் இருந்து காட்டேரிகுப்பம் வழியாக நீர்வரத்து வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் நீண்ட காலமாக தூர் வாரப்படாமல் இருந்து வந்தது. தன்னார்வலர்கள் நிதியுதவியுடன் தற்போது தூர்வாரப்பட்டு வருகிறது. நேற்று காலை சந்தை புதுக்குப்பத்தில்  தூர்வாரும் பணியை கவர்னர் ஆய்வு செய்தார். அவருடன் வாய்க்கால் தூர்வார நிதி உதவி அளித்த தன்னார்வலரும் உடன் வந்திருந்தார். அவரை பொதுமக்களிடம் சுட்டிக்காட்டி, இந்த வாய்க்கால் தூர்வாருவதற்கான நிதி உதவி இவரது நிறுவனத்தில் இருந்து நேரடியாக ஒப்பந்ததாரரிடம் வழங்கப்படுகிறது. வாய்க்கால் தூர்வாரப்பட்டால், எதிர்வரும் காலங்களில் தடையின்றி தண்ணீர் வர ஏதுவாக இருக்கும்.

அரசாங்கத்தில் பணம் இல்லாததால் தன்னார்வலர்கள் நிதி உதவி அளிக்க முன்வர வேண்டும். புதுவையில் உள்ள 84 ஏரிகள், 23 வாய்க்கால்கள் தன்னார்வலர்கள் நிதி உதவியுடன் தூர் வாரப்பட்டுள்ளது. அதற்கு கதாநாயகன் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சண்முகசுந்தரம் என்றார். மேலும் தன்னார்வலரை பொதுமக்களிடம் விளக்கம் அளிக்குமாறு கவர்னர் கூறினார். அப்போது அவர், கவர்னரின் மேற்பார்வையில் நேரடியாக பொதுப்பணித்துறை மூலம் ஒப்பந்ததாரரிடம் நிதி வழங்கி வருகிறேன் என்றார். அங்கிருந்த பொதுமக்கள் கவர்னர் கிரண்பேடியிடம் சேதமடைந்த சாலை, குடிநீர் குழாய்களை புதுப்பித்து தருமாறு கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளித்த கிரண்பேடி தற்சமயம் டப்பு இல்லே.. மணி இல்லே என  தெரிவித்தார்.

உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாரா?
புதுச்சேரி அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு இந்தாண்டு போனஸ் வழங்கப்படுவது உறுதி எனவும், இதற்கு அனுமதி கேட்டு கவர்னர் கிரண்பேடிக்கு  கோப்பு அனுப்பி வைத்ததாகவும், ஆனால் கவர்னர் அனுமதி வழங்க மறுத்துவிட்டதாகவும் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு வாட்ஸ்அப்பில் பதிலளித்துள்ள கவர்னர் கிரண்பேடி,  `முதல்வர் நாராயணசாமி முழுமையான தகவல்களை தெரிவிக்காமல், தவறான தகவல்களை கூறி  வருகிறார. இந்த விஷயத்தில் யார் பொய் சொல்கிறார்கள் என்பதை கண்டறிய சோதனைக்கு உட்படுத்த வேண்டும்.  உண்மை  கண்டறியும் சோதனைக்கு நான் தயாராக  இருக்கிறேன். முதல்வர் தயாரா?’ என்று கேள்வி எழுப்பி உள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Governor ,Government ,Puducherry ,Volunteers , Governor Kiranpady is not a pubic state
× RELATED கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்: மாவட்ட ஆட்சியர் பணியிடமாற்றம்