×

ஓசூர் வனப்பகுதியில் குட்டிகளுடன் 12 யானைகள் முகாம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனப்பகுதியில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு குட்டிகளுடன் 12 யானைகள் முகாமிட்டிருந்தன. இதையடுத்து, வனத்துறையினர் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு யானைகளை விரட்டினர். இந்நிலையில், கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து 30க்கும் மேற்பட்ட யானைகள், நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு வந்தன. அங்கிருந்து குட்டிகளுடன் 12 யானைகள், ஓசூர் வனப்பகுதிக்கு வந்துள்ளன. ஓசூர் பகுதியில் 2ம்போக சாகுபடி பணி நடக்கும் நிலையில், கிராம மக்கள் ஆடு-மாடுகளை மேய்க்கவோ, விறகு பொறுக்கவோ வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : elephants camp ,kittens ,forest ,Hosur , 12 elephants, camps with Hosur, forest, kitti
× RELATED பழநி வனப்பகுதி எல்லைகளில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு