×

வெளிச்ச திருவிழாவிற்கு `வெடி’ வைக்கலாமா? பறிபோகிறதா பண்டிகை கோலாகலம்

குடும்ப உறவுகள், ஐயப்ப தரிசனம் என சமீபகாலமாக பல்வேறு பரபரப்பு தீர்ப்புகளை கொடுத்து வருகிறது உச்சநீதிமன்றம். அந்த வரிசையில் பட்டாசுக்கு தடை கோரிய வழக்கிலும் அதிரடி தீர்ப்பு வழங்கியிருக்கிறது. தீபாவளி தினத்தன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே வெடிக்க வேண்டும்,  குறைந்த அளவிலான புகை, சத்தம் வெளியிடும் பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 6 கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதித்திருப்பது தான் தற்போது பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டாசை விட அதிக மாசுபாட்டை கொண்டது வாகனங்கள். பெட்ரோல், டீசலில் இயங்கும் கார் மற்றும் டூவீலர்கள் வெளியிடும் புகையால் ஏற்படும் காற்று மாசுவால் இந்தியாவில் ஆண்டுக்கு 12 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். சமீபத்தில் உலகில் அதிக மாசுபாடு நிறைந்த 12 நகரங்களின் பட்டியலை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டது.

இதில் 11 நகரங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை என்பது தான் அதிர்ச்சி. ஆனால், இந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த எந்த நகரமும் இடம் பெறவில்லை என்பது ஓர் ஆறுதல். நிலைமை இவ்வாறிருக்க மாசுபாட்டை காரணம் காட்டி பட்டாசுத் தொழில் மட்டும் முடக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.
`குட்டி ஜப்பான்’ என்றழைக்கப்படும் சிவகாசியில் இருந்து தான் தீபாவளிக்கு இந்தியா முழுவதும் பட்டாசுகள் சப்ளை செய்யப்படுகிறது. 850க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில், நேரடியாக 2 லட்சம் ேபரும், மறைமுகமாக 3 லட்சம் பேரும் இதனால் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். 2016ம் ஆண்டு 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனையான பட்டாசு, ஜிஎஸ்டி வரிவிதிப்பால்  கடந்த ஆண்டு 2 ஆயிரம் கோடி ரூபாயாக விற்பனை குறைந்தது. தற்போது, மாசு கட்டுப்பாடு என்ற பெயரில் உச்ச நீதிமன்றம் விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் இத்தொழிலை மேலும் நசிய வைக்கும். இதுகுறித்து இங்கே நான்கு கோண அலசல்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : lighting festival ,explosion ,festival , The light festival, the 'explosives', the festivities, the festivities, the gallows
× RELATED சீனாவின் டிராகன் படகுத் திருவிழா கோலாகலம்..!!