தொழிலதிபர் வீட்டில் 14 லட்சம், நகைகள் அபேஸ்: வேலைக்கார பெண் கைது

சென்னை: சென்னை கே.கே.நகர் அழகர் சாமி தெருவை சேர்ந்தவர் சென்னியப்பன் (48). தொழிலதிபரான இவர், கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், வீட்டில் வைத்திருந்த ₹14 லட்சம் ரொக்கம் மற்றும் நகைகள் சிறுக சிறுக மாயமானதாக தெரிவித்திருந்தார். மேலும், வீட்டில் கடந்த 4 ஆண்டுகளாக வேலை செய்து வரும் அம்மு என்ற வேலைக்கார பெண் மீது சந்தேகம்  உள்ளதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார்.அதன்படி, போலீசார் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த அம்மு என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அதில் வேலைக்கார பெண் அம்மு சிறுக சிறுக பணம் மற்றும் நகைகளை திருடியது தெரிய வந்தது.  இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.அவரிடமிருந்து ₹5லட்சம் மதிப்புள்ள நகை, பணம் மற்றும் விலை உயர்ந்த பட்டுப் புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : jewelery house ,maid , Businessman's ,14 lakhs, jewelery lady arrested
× RELATED துணிக்கடை அதிபர் வீட்டில் ₹1.8 லட்சம்,...