×

டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் ஸ்விடோலினா சாம்பியன்

சிங்கப்பூர்: டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் தொடரின் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்சை வீழ்த்திய உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ஆண்டு இறுதி தரவரிசையில் டாப் 8 இடங்களைப் பிடித்த வீராங்கனைகள் மோதிய இந்த தொடரில், சிவப்பு மற்றும் வெள்ளை என இரு பிரிவுகளாக நடந்த ரவுண்ட் ராபின் லீக் சுற்றின் முடிவில் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (5வது  ரேங்க், அமெரிக்கா), எலினா ஸ்விடோலினா (6), கரோலினா பிளிஸ்கோவா (7, செக்.), கிகி பெர்டன்ஸ் (8, நெதர்லாந்து) ஆகியோர் அரை இறுதிக்கு தகுதி பெற்றனர்.அரை இறுதியில் பெர்டன்ஸுடன் மோதிய ஸ்விடோலினா 7-5, 6-7 (5-7), 6-4 என்ற செட் கணக்கில் போராடி வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு அரை இறுதியில் ஸ்டீபன்ஸ் 0-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் பிளிஸ்கோவாவை வீழ்த்தினார். நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் - எலினா ஸ்விடோலினா மோதினர். முதல் செட்டை 3-6  என்ற கணக்கில் இழந்த ஸ்விடோலினா, அடுத்த 2 செட்களையும் 6-2, 6-2 என்ற கணக்கில் கைப்ப்ற்றி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இப்போட்டி 2 மணி, 23 நிமிடத்துக்கு நீடித்தது. மகளிர் இரட்டையர் பிரிவு பைனலில் டிமியா பாபோஸ் (ஹங்கேரி) - கிறிஸ்டினா மிளாடெனோவிச் (பிரான்ஸ்) ஜோடி (2வது ரேங்க்) 6-4, 7-5 என்ற நேர் செட்களில் நம்பர் 1 இணையான செக் குடியரசின் பார்போரா ஸ்டிரைகோவா -  கேதரினா சினியகோவா ஜோடியை வீழ்த்தி கோப்பையை முத்தமிட்டது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : WTA ,Payal ,Swivolina Champion , WTA,Payal's,Swivolina,Champion
× RELATED தமிழ்ச் சுவடியியல் (ம) பதிப்பியல்...