×

ஊழலில் ஆட்சியாளர்களுக்கும் தொடர்பு இருப்பதால் அண்ணாமலை பல்கலை கழக ஊழலை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

சென்னை: அண்ணாமலை பல்கலைகழக ஊழல்களில் ஆட்சியாளர்களுக்கும் தொடர்பு இருப்பதால் நியாயமாக நடைபெற வாய்ப்பில்லை எனவே சிபிஐ விசாரணை செய்ய வேண்டும். என்று பாமக நிறுவனர் ராமதாஸ்  கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2009-11ம் ஆண்டுகளில் நடந்த ஊழல்கள்  தொடர்பாக அப்போதைய துணைவேந்தர் ராமநாதன், பதிவாளர் ரத்தினசபாபதி  உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. 2015ம் ஆண்டில்  பல்கலைக்கழக துணைவேந்தராக மணியன் நியமிக்கப்பட்ட பிறகு  ஊழல்கள்   தலைவிரித்தாடியதாகவும், அப்போதைய பதிவாளர் ஆறுமுகம், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் சந்திரசேகரன் ஆகியோர் இந்த ஊழலுக்கு துணை நின்றதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.மேலும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கணினி புரோகிராமர்களாக பணியாற்றி வந்த 189 பேரும், ஆசிரியர் அல்லாத பணியில் இருந்த 30 பேரிடம் பேராசிரியராக மாற்றம் செய்ய  தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம்  ரூ.10.95 கோடி லஞ்சம் பெறப்பட்டுள்ளது.

பல்கலைக் கழகத்தின் சார்பில் தொலைதூர கல்வி இயக்கத்திற்கான புத்தகங்கள் அச்சிடுதல், பொருட்களை கொள்முதல் செய்தல் ஆகியவற்றுக்கான ஒப்பந்தங்களை வழங்குவதில் 30  சதவீதம் லஞ்சம்  பெறப்பட்டது. தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் பணியாற்றியவர்களை இடமாற்றம் செய்து, அதை ரத்து செய்வதற்காக ஒவ்வொருவரிடமிருந்தும் லட்சக்கணக்கில் கையூட்டு பெறப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக அரசிடம் கடந்த காலங்களில் புகார் செய்தும் அதன் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.அதேநேரத்தில் இந்த ஊழல்களில் ஆட்சியாளர்களுக்கும் தொடர்பு இருப்பதால் விசாரணை நியாயமாக நடைபெற வாய்ப்பில்லை. ஆகவே, அண்ணாமலை பல்கலையில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த ஊழல்கள் பற்றி சிபிஐ  விசாரணையிட வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CBI ,Ramadoss ,Annamalai University ,rulers , Because,relationship,CBI should investigate Annamalai University scam: Ramadoss demand
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...