×

மேடவாக்கம் சந்திப்பு மேம்பாலம் உட்பட 2 மேம்பால பணிகளை டெண்டர் எடுத்த நிறுவனம் ஓட்டம்: மஞ்சள் நோட்டீஸ் அளித்த நெடுஞ்சாலைத்துறை

சென்னை: மேடவாக்கம் சந்திப்பு மேம்பாலம் உட்பட 2 மேம்பால பணிகளை டெண்டர் எடுத்த ஒப்பந்த நிறுவனம் ஓட்டம் பிடித்து விட்டது. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் அந்த நிறுவனத்துக்கு மஞ்சள் நோட்டீஸ் அளித்திருப்பதாக கூறப்படுகிறது. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் மேடவாக்கம் சந்திப்பு மற்றும் கோவிலம்பாக்கம் சந்திப்பு பகுதியில் 2 மேம்பாலம் கட்டுவதற்கு நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது. இதை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் டெண்டர் விடப்பட்டது. இதில், தேர்வு செய்யப்பட்ட ஆந்திர நிறுவனம் சார்பில் ₹146 கோடி செலவில் வேளச்சேரி தாம்பரம் சாலையில் மேடவாக்கம் சந்திப்பில் 3 கி.மீட்டரில் மேம்பாலம், கோவிலம்பாக்கம் சந்திப்பு மேம்பாலம் கட்டுமான பணி கடந்த 2015ம் ஆண்டு தொடங்கியது. இப்பணிகளை 2018ம் ஆண்டிற்குள் முடிக்கவும் முடிவு செய்யப்பட்டது. ெதாடர்ந்து பால திட்டத்திற்காக, நில எடுப்பு மற்றும் இழப்பீடு வழங்கும் பணி நடந்து வந்தது. இதை தொடர்ந்து மேம்பால கட்டுமான பணிகள் நடந்து வந்தது. குறிப்பாக, இரண்டு மேம்பால பணிகளும் 35 சதவீத பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில் திடீரென மேம்பால பணிகளை டெண்டர் எடுத்த நிறுவனம் தொடர்ந்து பணிகளை மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு மஞ்சள் நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. அதில், மேம்பால பணிகளை தொடங்கவில்லை என்றால் ஒப்பந்தம் ரத்து ெசய்யப்படும் என்று அறிவித்தது. ஆனால், அதன்பிறகும் சம்பந்தப்பட்ட நிறுவனம் பணிகளை தொடங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அந்த நிறுவனத்தின் மீது போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து புதிய நிறுவனத்தை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. அந்த பணிகள் முடிந்தவுடன் பணிகள் தொடங்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மேடவாக்கம் சந்திப்பு மற்றும் கோவிலம்பாக்கம் சந்திப்பு பகுதியில் 2 மேம்பாலம் கட்டும் பணிகள் கடந்த 2016ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பணிகள் 2018ம் ஆண்டு முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், 2016ம் ஆண்டு முதல் இந்த மேம்பால பணிகள் ஆமை வேகத்தில்தான் நடைபெற்று வந்தது. இரண்டு மேம்பாலங்களில் ராட்சத தூண்கள் அமைக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து ஒப்பந்த நிறுவனம் சில மாதங்களாக மேம்பால பணிகளை நிறுத்தி வைத்தது. மேம்பாலம் பணிகளை டெண்டர் எடுத்த ஆந்திராவை சேர்ந்த நிறுவனம் திடீரென பணிகளை விட்டுவிட்டு ஓட்டம் பிடித்து விட்டது. தற்போது புதிதாக டெண்டர் விடப்பட்டுள்ளது. இனி டெண்டர் எடுத்து, பணிகள் தொடங்கி, முடிக்க மேலும் 2 ஆண்டு காலம் ஆகலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

மேம்பாலம் பணிகளை டெண்டர் எடுத்த ஆந்திராவை சேர்ந்த நிறுவனம் திடீரென பணிகளை விட்டுவிட்டு ஓட்டம் பிடித்து விட்டது. இதனால் நிறுவனத்திற்கு
மஞ்சள் நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Highway ,Medavativu Junction Junction Firm , Medavakkam Junction, High Speed, Yellow Notices, Highways
× RELATED மதுரவாயல் அருகே பரபரப்பு பழைய விளையாட்டு உபகரணங்கள் கிடங்கில் தீ