×

ஒகேனக்கலுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்: பரிசில்களில் சவாரி செய்து பார்வையாளர்கள் மகிழ்ச்சி

ஒகேனக்கல்: ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து குறைந்த போதிலும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும் பரிசில் சவாரி செய்தும் ஆனந்தத்தில் திளைத்துள்ளனர். கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மலையளவு வெகுவாக குறைந்துள்ளதால் ஒகேனக்கலுக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 5,000 கன அடியாக சரிந்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ஒகேனக்கலுக்கு சுற்றுலாப்பயணிகள் அதிகளவு படையெடுத்து வந்தனர்.

அவர்கள் பரிசில்களில் சவாரி செய்தும் மெயின் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்தும் மகிழ்ந்தனர். இதேபோல் முதலைப்பண்ணை வண்ணமீன் காட்சியகம் மற்றும் இதர இடங்களிலும் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனையடுத்து போலீசார், தீயணைப்பு மற்றும் ஊர்க்காவல் படையினர்  பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Visitors , Tourists,invading,hogenakal falls,Visitors,happy,ride
× RELATED வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம்,...