×

கெயில், உயர்மின் அழுத்த பாதை திட்டத்தால் மேற்கு மண்டலத்தில் மதிப்பிழந்த விளைநிலங்கள்: பரிதவிக்கும் விவசாயிகள்

சேலம்: கெயில், 8வழிபசுமை சாலை, உயர்மின் அழுத்த பாதை போன்ற திட்டங்களின் எதிரொலியாக விளைநிலங்களை அடிமாட்டு விலைக்கு புரோக்கர்கள் கேட்பது ேமற்கு மண்டல விவசாயிகளை வேதனையில்  ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக மத்திய அரசு சார்பில் கொண்டு வரப்படும் திட்டங்கள் யாவும் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. கொச்சியில் இருந்து பெங்களூருக்கு  குழாய்வழியாக எரிவாயு கொண்டு ெசல்லும் கெயில் திட்டம், திருப்பூரில் இருந்து சட்டீஸ்கர் மாநிலம் ராய்கர் வரை 800 கிலோவாட் உயர் மின்அழுத்த பாதை அமைக்கும் திட்டம், சேலத்தில் இருந்து சென்னைக்கு 8வழி  விரைவுச்சாலை அமைக்கும் திட்டம் என்று இந்த திட்டங்கள் அனைத்தும் மேற்கு மண்டலத்தில் உள்ள விளைநிலங்களுக்கு உலை வைப்பதாகவே உள்ளது.

 கெயில் திட்ட பணிகளும், 8வழி பசுமை சாலை திட்ட பணிகளும் நீதிமன்ற நடவடிக்கைகளால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 800 கிலோவாட் உயர் மின்அழுத்த பாதைக்காக விளைநிலங்களில்  டவர் அமைக்கும் பணிகளில் பவர்கிரிட் நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இதை கண்டித்தும் தற்போது ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்து வருகிறது. இப்படி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு போராட்டங்கள், நீதிமன்றங்கள்  மூலம் அது தற்காலிக நிறுத்தப்பட்டாலும் அது விளைநிலங்களின் மதிப்புக்கு உலை வைத்து விடுகிறது என்று வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது: மேற்கு மண்டலத்தை  பொறுத்தவரை கெயில், 8வழிவிரைவுச்சாலை, உயர்மின் அழுத்தபாதை போன்ற திட்டப்பணிகளுக்காக முழுமையாக எந்த நிலத்ைதயும் கையகப்படுத்தவில்லை. ஆனால் அளவீடு செய்து முட்டுக்கல் நட்டுள்ளனர்.

இதில் கெயில் திட்டத்தை பொறுத்தவரை விளைநிலங்களுக்கு நடுவே குழாய் பதித்து கொண்டு செல்வது பிரதானமாகவும், உயர்மின் அழுத்த பாதை அமைக்கும் திட்டத்திற்கு மின்கோபுரங்கள் அமைப்பதும் பிரதானமாகும்.  வழிச்சாலையானது விளைநிலங்களை ஒட்டி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கெயில், உயர்மின் அழுத்த பாதை போன்ற திட்டங்களால் விளைநிலங்கள் குறுக்கும், நெடுக்குமாக துண்டாடப்படும். இதனால் பயிர்சாகுபடியை  எப்ேபாதும் போல் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த திட்டங்களால் அதிகபட்சமாக 2ஏக்கர் நிலம் வைத்திருக்கும் சிறுவிவசாயிகளே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர்.

தற்போது மேற்கண்ட திட்டங்களால் மேற்கு மண்டலத்தில் விளைநிலங்களின் மதிப்பீடு வெகுவாக குறைந்து வருகிறது. அதிலும் திட்டப்பணிகள் நிறைவேற்றப்படும் இடங்களில், எதிர்காலத்தில் பல்ேவறு பிரச்சினைகள்  உருவாகும் என்பதால் விவசாயிகள், நிலங்களை விற்பதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். ஆனால் இதை சாதமாக்கிக் கொண்ட புரோக்கர்கள் 20லட்சம் மதிப்புள்ள ஒரு ஏக்கர் நிலத்தை 2லட்சத்திற்கு கேட்கின்றனர். இதனால்  ரத்தத்தை வேர்வையாக்கி வளப்படுத்திய மண்ணை விற்கவும் மனமில்லாமல், விவசாயத்தை தொடரவும் வழியில்லாமல் பரிதவித்து வருகின்றனர்.இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

இது குறித்து நிலத்தரகர்களிடம் கேட்டபோது, ‘‘மேற்கண்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுமா? அல்லது தடைசெய்யப்படுமா? என்பது குறித்த ெதளிவான முடிவுகள் வரும் வரை, சம்மந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள  விலைநிலங்களை வாங்குவதற்கு யாரும் முன்வரமாட்டார்கள். இப்படிப்பட்ட சூழலில் எப்படியாவது நிலத்தை விற்க முன்வரும் விவசாயிகளுக்கு மட்டுமே இது போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. அரசு திட்டங்களை கைவிட்டால்  சர்ச்சைகள் விலகி, விளைநிலங்களின் சந்ைத மதிப்பீடு உயரும்,’’ என்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gail ,zone , Gail, Peak Stress Path Project, Farmers
× RELATED குழாய் பதிப்பதை தடுத்து விவசாயிகள் போராட்டம்