×

மாற்றுத்திறனாளிகள் வந்து செல்ல வசதியாக அரசு அலுவலகங்களில் சாய்வு தளம், லிப்ட், கழிப்பறை அமைக்க உத்தரவு: டிச.31ம் தேதிக்குள் முடிக்க அறிவுரை

சென்னை: மாற்றுத்திறனாளிகள் வந்து செல்ல வசதியாக அரசு அலுவலகங்களில் லிப்ட், சாய்வு தளம், கழிப்பறை அமைக்கும் பணியை டிச.31ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக பொதுப்பணித்துறை கட்டுபாட்டில்  சிறியதும், பெரியதுமாக 44 ஆயிரம் அரசு கட்டிடங்கள் உள்ளது. இந்த அலுவலகங்களில் பெரும்பாலானவைகளில் சாய்வுதளம், லிப்ட், மாற்றுத்திறனாளிகளுக்கென தனி கழிப்பறை வசதிகள் செய்து தரப்படவில்லை. இதனால்  மாற்றுத்திறனாளிகள் வந்து செல்லவே கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மாற்றுத்திறனாளிகள் வந்து செல்ல வசதியாக சாய்வுதளம்,  லிப்ட், மாற்றுத்திறனாளிகளுக்கென கழிப்பறை வசதி கட்டாயம் செய்து தர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு குறித்து பொதுப்பணித்துறை, அறநிலையத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளுக்கு தமிழக  அரசு கடிதம் எழுதியது.

இதை தொடர்ந்து தமிழக பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் மனோகரன், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் இல்லாத கட்டிடங்களை கண்டறிய அறிவுரை வழங்கினார். அதன் பேரில்  எழிலக வளகத்தில் உள்ள ெபாதுப்பணித்துறை தலைமை அலுவலகம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்களில் லிப்ட், சாய்வுதளம், கழிப்பறை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிகளை டிசம்பர் 31ம் தேதிக்குள்  முடிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, புதிய அரசு அலுவலக கட்டிடங்களில் மாற்றுத்திறனாளிகள் வந்து செல்லும் வகையில் பல்வேறு வசதிகள் செய்து  தரப்படுகிறது. பழைய கட்டிடங்களில் பெரும்பாலானவைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகள் இல்லை. அந்த கட்டிடங்களில் லிப்ட், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் சாய்வுதளம், லிப்ட், கழிப்பறை அமைக்கும் பணிகள் முழுவதுமாக முடிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது’ என்றார். அதே நேரத்தில் அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள திருமண மண்டபங்கள்,  மண்டல இணை ஆணையர், உதவி ஆணையர், செயல் அலுவலர் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் அதற்கான வசதிகள் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை  என்று கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government offices ,arrival ,persons , Persons with disabilities;
× RELATED கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில்...