×

அசத்தும் கவாஸாகி இசட் 900 பைக்

புதிய மாற்றங்களுடன் 2019 மாடல் கவாஸாகி இசட் 900 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதில், முக்கிய மாற்றமாக டிரெல்லிஸ் பிரேமில் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பிரேம்  வெறும் 13.5 கிலோ மட்டுமே எடை கொண்டது. இப்புதிய கவாஸாகி இசட் 900 பைக்கில் 4 சிலிண்டர்கள் கொண்ட 948 சிசி லிக்யூடு கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 123 பிஎச்பி  பவரையும், 98.6 என்எம் டார்க் திறனையும் வழங்கவல்லது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் முன்புறத்தில் 41 மிமீ இன்வர்டெட் போர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷன்  அமைப்பும், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. இதன் சிறப்பான ஸ்விங் ஆர்ம் அமைப்பு இந்த ஒற்றை ஷாக் அப்சார்பர் அதிக நிலைத்தன்மையுடன் செல்வதற்கு உதவுகிறது.

இந்த பைக்கின் முன்புறத்தில் 300 மி.மீ விட்டமுடைய இரட்டை டிஸ்க் பிரேக்குகளும், பின்புறத்தில் 250 மிமீ விட்டமுடைய பெட்டல் டிஸ்க் பிரேக்கும் இடம்பெற்றுள்ளன. இந்த பைக்கில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஸ்லிப்பர்  கிளட்ச் ஆகியவை நிரந்தர அம்சங்களாக இடம்பெற்றுள்ளன. இப்புதிய பைக், 3 விதமான இரட்டை வண்ணக்கலவையில் கிடைக்கிறது. மெட்டாலிக் மூன்டஸ்ட் க்ரே மற்றும் எபோனி, பியர்ல் பிளாட் ஸ்டார்ட்டஸ்ட் ஒயிட் மற்றும்  மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக் மற்றும் மெட்டாலிக் பிளாட் ஸ்பார்க் பிளாக் மற்றும் மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக் ஆகிய வண்ண தேர்வுகள் உள்ளன.  புதிய மாற்றங்களுடன் வந்திருக்கும் கவாஸாகி இசட் 900 பைக் இந்தியாவின்  மிக குறைவான விலை 4 சிலிண்டர்கள் அமைப்புடைய இன்ஜின் கொண்ட சூப்பர் பைக் மாடலாக வந்துள்ளது. டுகாட்டி மான்ஸ்ட்டர் 821, டிரையம்ப் ஸ்ட்ரீட் டிரிப்பிள் எஸ் மற்றும் யமஹா எம்டி-09 ஆகிய பைக் மாடல்களுடன்  போட்டி போடும். இப்புதிய பைக்கிற்கு ₹7.28 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kawasaki Z 900 Bike
× RELATED விமானத்தில் பயணி போதையில் ரகளை: போலீசில் ஒப்படைப்பு