×

அடுத்தடுத்த சரிவுகளால் தள்ளாடும் பங்குச்சந்தை

மும்பை: சர்வதேச அளவில் மட்டுமின்றி, இந்திய அளவில் பங்குச்சந்தை தொடர்ந்து தள்ளாடியபடி உள்ளது. இதற்கு ஒரு பக்கம் குரூட் எண்ணெய் விலை ஏற்றம், இன்னொரு பக்கம் ரூபாய் மதிப்பு சரிவு காரணம். சர்வதேச அளவில், அமெரிக்க - சீன வர்த்தக போர், ஐரோப்பிய நிதி நிலை போன்றவற்றால் பங்குச்சந்தை நிலையாக இல்லை. பல வெளிநாட்டு பங்கு முதலீட்டாளர்கள், அதிக அளவில் பங்குகளை வாபஸ் பெற்று வருகின்றனர்.  இதன் தாக்கம் இந்தியாவிலும் ஏற்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை, கடந்த சில மாதமாக ரூபாய் மதிப்பு  தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் இறக்குமதி பொருட்கள் மீதான அன்னிய செலாவணி அதிகரித்தபடி உள்ளது. போதாக்குறைக்கு ஏற்றுமதி அளவும் சரிந்து  வருகிறது. இந்திய அளவில் பல திட்டங்கள் போதுமான பலன்களை இன்னும் எட்டவில்லை.

கடந்த ஆகஸ்ட் மாதம் வரை இந்தியா தான், ஆசிய நாடுகளில் பங்குச்சந்தையில் முதலிடத்தில் இருந்தது. ஆனால், தொடர்ந்து சர்வதேச அழுத்தம், அமெரிக்கா தந்த நெருக்கடி போன்றவற்றால் அந்த நிலையை தக்க வைக்க  முடியவில்லை. வௌிநாட்டு பங்கு முதலீட்டாளர்கள் தங்களின் பங்கு  முதலீட்டை வாபஸ் பெறுவதும் ரூபாய் மதிப்பு சரிவுக்கு துணை போயின. இப்போதைக்கு நிப்டி 100 புள்ளிகள் சரிவுடன் 10,030 புள்ளிகளில் உள்ளது.  பெரிதாக எந்த பங்கும் அதிக லாபத்தை தரவில்லை. இனி வரும் காலங்களில், அடுத்து வரும் ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள், அடுத்தாண்டு ஏப்ரிலில் வரும் லோக்சபா தேர்தல்கள் ஆகியவற்றை பொறுத்து தான் பங்குச்சந்தைகள் மீண்டும் வலுவடைவது உள்ளது என்று  நிபுணர்கள் கூறுகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : With,successive slopes,Stake in the stock market
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 455...