அர்ஜென்டினா ஜி-20 மாநாட்டில் டி.கே.ரங்கராஜன் பங்கேற்பு

சென்னை: அர்ஜென்டினாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் கலந்து கொள்கிறார்.இது குறித்து வெளியிட்ட அறிக்கை: ஜி-20 நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாநாடு அர்ஜென்டினா நாட்டின் தலைநகரான பியூனோஸ் ஏர்ஸில் அக்டோபர் 31, நவம்பர் 1, 2ம் தேதிகளில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில்  இந்தியாவின் சார்பில் மக்களவை சபாநாயகர் உட்பட மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.  இந்த மூவரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை குழு தலைவரும், மத்தியக்குழு உறுப்பினருமான  டி.கே. ரங்கராஜன் கலந்து கொள்கிறார். 2018 அக்டோபர் 28ம் தேதி டெல்லியிலிருந்து புறப்படுகிறார்.  மாநாட்டில் கலந்து கொண்டு 2018 நவம்பர் 5ம் தேதி சென்னை திரும்புகிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: