×

ஆபாச வார்த்தை, தவறான சித்தரிப்பு வடசென்னை படகுழுவினர் மன்னிப்பு கேட்க வேண்டும்: வழக்கறிஞர்கள் வலியுறுத்தல்

சென்னை: ஆபாசமான வார்த்தைகள் மற்றும் வடசென்னையை தவறாக காண்பித்தது குறித்து வடசென்னை படகுழுவினர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்கம்  வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சென்னையில் நேற்று சங்கத்தின் தலைவர் சார்லஸ் அலெக்சாண்டர், பொதுச்செயலாளர் மணிமாறன் ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வட சென்னை படத்தில் ஆபாசமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டது, வடசென்னையை தவறாக சித்தரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குனர் வெற்றிமாறன் மீது காவல்துறையில் புகார் கொடுத்துள்ளோம். அவர் மீது  சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றோம். சமூக நலன் சார்ந்து சிந்திக்கும் சமுத்திரகனி, அமீர் போன்றவர்கள் இதுபோன்ற படங்களில் ஆபாச வசனங்களை பேசி நடித்துள்ளனர்.

எனவே, இந்த படத்திற்கு எதிராக  சட்டரீதியான போராட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளோம். தமிழக அரசு இதுபோன்ற படங்களின் வெளியீட்டில் தலையிட்டு முற்றுபுள்ளி வைக்க வேண்டும். பல கருத்துக்களை கூறும் கமல், ரஜினி இந்த படம் குறித்து ஏதும்  கூறாமல் உள்ளனர். இது போன்ற படங்களை இனி வரவிடாமல் தடுப்போம். வடசென்னை பகுதி கலாச்சாரம் சீரழிந்து உள்ளதாக கூறுகிறார்கள். ஆனால், வடசென்னை பகுதி கலாச்சார பூமியாகும். படித்த இளைஞர்கள் பலர் ஐடி  கம்பெனிகளுக்கு வேலைக்கு செல்கிறார்கள். வடசென்னை மீது வன்மத்தை வைத்து படத்தை எடுத்துள்ளனர். படகுழு மீது வழக்கு தொடர உள்ளோம். எனவே, படக்குழுவினர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : portrayal ,North Sea , Pornography, wrong depiction,The boats of North Chennai, the lawyers assert
× RELATED பாதுகாப்பு ஒத்திகையில் முஸ்லிம்களை...