×

ரயில்நிலையத்தில் சுற்றித்திரிந்த 8 சிறுவர்கள் காப்பகத்தில் ஒப்படைப்பு

சென்னை: சென்ட்ரல் ரயில்நிலையத்தில் சுற்றித்திரிந்த 8 சிறுவர்களை ரயில்வே போலீசார்  மீட்டனர்.சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே இன்ஸ்பெக்டர் தாமஸ் ஜேசுதாசன் தலைமையில் போலீசார் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சுற்றித்திரிந்த 8 சிறுவர்களை அழைத்து  விசாரித்தனர். அப்போது  அவர்கள் கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், மெரினா கடற்கரையை சுற்றிபார்க்க வேண்டும் என்ற ஆசையில் நேற்று மின்சார ரயில் மூலம் சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு வந்ததாகவும், மெரினா கடற்கரைக்கு  எப்படி போக வேண்டும் என்று தெரியாமல் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தவித்துக் கொண்டு இருப்பதாகவும் கூறியுள்ளனர். இதையடுத்து போலீசார் அந்த 8 சிறுவர்களை மீட்டு ராயபுரம் அரசு குழந்தைகள் காப்பகத்தில்  சேர்த்தனர். மேலும் மீட்கப்பட்ட சிறுவர்கள் குறித்து அவர்களின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : children , Wandering , station,8 children,Handing ,archive
× RELATED திருமழப்பாடியில் பள்ளி வேன் மீது மினி...