×

திருப்புவனம் பகுதியில் பரவும் மர்ம காய்ச்சல்: அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை

திருப்புவனம்: திருப்புவனம் தாலுகா மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே முதுவன் திடல், கொத்தங்குளம், பாப்பாங்குளம், மடப்புரம், வடகரை, திருப்புவனம் பேரூராட்சியின் பல்வேறு பகுதிகளில் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். திருப்புவனம் தாலுகா மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் மர்ம காய்ச்சலுக்கு பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் திருப்புவனம் தாலுகா மருத்துவமனையில் வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவில் இரவு நேர பணியில் போதுமான டாக்டர்கள் பணியில் இல்லை.

இந்நிலையில் நேற்றிரவு திருப்புவனம் தாலுகா மருத்துவமனைக்கு நோயாளிகள் ஏராளமாேனார் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வந்தனர். ஆனால் அங்கு வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவில் 1 டாக்டர் மற்றும் 1 நர்ஸ் மட்டுமே பணியில் இருந்தனர். இதனால் அங்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.  இது குறித்து சுகாதார துணை இயக்குநர் யசோதாராணியிடம் கேட்ட போது, மருத்துவ இணை இயக்குநரிடம் தொடர்புகொள்ளுங்கள். நானும் அவரிடம் தகவல் தெரிவிக்கிறேன் என்று கூறினார். இணை இயக்குநர் விஜயன்மதமடக்கியிடம் தொடர்பு கொள்ள முயன்ற போது அவர் போனை எடுக்கவில்லை. நோயாளிகள் நலன் கருதி இரவு நேரத்தில் கூடுதலாக டாக்டர்கள் மற்றும் நர்ஸ்களை நியமிக்க மருத்துவமனை நிர்வாகம் முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : fever spread ,government hospital ,doctors , Turnaround, mystery fever, government hospital, lack of doctors
× RELATED அரசு ஆஸ்பத்திரியில் வெப்ப அலை விழிப்புணர்வு