×

டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் கெர்பரை வீழ்த்தினார் ஸ்லோன் ஸ்டீபன்ஸ்

சிங்கப்பூர்: டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் தொடரில், நம்பர் 1 வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்சிடம் தோல்வியைத் தழுவினார். சிவப்பு பிரிவு ரவுண்ட் ராபின் லீக் சுற்றில் நேற்று நடந்த இப்போட்டியில், ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டிலும் அதிரடியாக விளையாடி கெர்பரின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த ஸ்டீபன்ஸ் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.

இப்போட்டி 1 மணி, 40 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு லீக் ஆட்டத்தில் கிகி பெர்டன்சுடன் (நெதர்லாந்து) மோதிய நவோமி ஒசாகா (ஜப்பான்) 3-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கிய நிலையில் காயம் காரணமாக விலகினார். ரவுண்ட் ராபின் லீக் சுற்றின் முடிவில் சிவப்பு பிரிவில் முதல் 2 இடங்களைப் பிடித்த ஸ்‌டீபன்ஸ், பெர்டன்ஸ் அரை இறுதிக்கு முன்னேறிய நிலையில், கெர்பர், ஒசாகா வெளியேறினர். வெள்ளை பிரிவில் எலினா ஸ்விடோலினா, கரோலினா பிளிஸ்கோவா அரை இறுதிக்கு தகுதி பெற்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Slowan Stephens ,Peynels Gerber ,WTA , Slowan Stephens .WTA Peynels Gerber
× RELATED தமிழ்ச் சுவடியியல் (ம) பதிப்பியல்...