×

பஞ்சாப் அமைச்சர் சித்து அறிவிப்பு ரயில் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு அரசு வேலை

அமிர்தசரஸ் : ‘‘பஞ்சாபில் ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படும்’’ என்று அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் அருகே கடந்த 20ம் தேதி நடைபெற்ற தசரா கொண்டாட்டத்தின்போது, தண்டவாளத்தில் நின்று வேடிக்கை பார்த்தவர்கள் மீது ரயில் மோதி 61 பேர் இறந்தனர். பலர் காயமடைந்தனர். விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கியது. இதில், 46 பேரின் குடும்பத்தினருக்கு காசோலை வழங்கப்பட்டு விட்டதாகவும்,. மற்றவர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என்றும் இம்மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து நேற்று தெரிவித்தார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

அமிர்தசரஸ் விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பலவகையிலும் உதவ மாநில அரசு உறுதி பூண்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரில் தகுதியானவர்களுக்கு அரசு வேலை வழங்க திட்டமிட்டுள்ளது. அவர்கள் குடும்பத்தில் உள்ள வயதானவர்களுக்கு பென்ஷன் வழங்கப்படும். இந்த விபத்தில் அநாதைகளாக்கப்பட்ட குழந்தைகளை தத்தெடுக்க பலர் முன் வருகின்றனர். ஆனால், சட்டப்படி உள்ள நடைமுறைகளை மேற்கொண்ட பின்பே, தத்தெடுக்க அரசு அனுமதி அளிக்கும். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலத்தை வைத்துக்கொண்டு சிலர் அரசியல் செய்து வருவது துரதிர்ஷ்டவசமானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Punjab ,Minister ,Sidhu Announces Railway Accident Family , Punjab Minister Sidhu ,Announces ,Railway Accident Family
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து