×

வேதாரண்யத்தில் பரபரப்பு அரசு விழாவுக்கு மக்கள் வராததால் மத்திய அமைச்சர் தர்ணா: மக்களை வீடு, வீடாக தேடி அழைத்த அதிகாரிகள்

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் அரசு விழாவுக்கு பொதுமக்கள் வராததால் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தர்ணா போராட்டம் நடத்தினார். உடனே அதிகாரிகள் மக்களை தேடி அழைத்து வந்த பின் விழா நடந்ததால்  பரபரப்பு ஏற்பட்டது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆதனூர் கிராமத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு துணை சுகாதாரநிலைய நல்வாழ்வு மையத்தை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று திறந்து வைக்க வருகை  தந்தார். விழாமேடை அருகே அவர் சென்றார். அப்போது அந்த பந்தலில் ஆதனூர் கிராமமக்கள்  யாருமே இல்லை. பந்தலில் அரசு அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள்.  செவிலியர்கள் என 50 பேர் மட்டும் இருந்தனர்.

இதை பார்த்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆத்திரம்  அடைந்தார். இப்பகுதி கிராமமக்கள் இங்கு இருக்கிறார்களா? இல்லையா? என அதிகாரிகளிடம்  கேட்டார். அதிகாரிகள் ஒன்றும் சொல்ல முடியாமல் நின்றனர்.  இப்பகுதி மக்கள்  இல்லாமல் எதற்கு இந்த விழா என கோபத்துடன் பேசினார். இப்பகுதி மக்களை உடனே  அழைத்து வர சொன்னார். சுமார் 1 மணி நேரம் மேடைக்கு செல்லாமல் மேடை முன்பு அமர்ந்து மக்களை அழைத்து  வந்ததால்தான் மேடைக்கு செல்வேன் என கூறி தர்ணா செய்தார். அதனால் பெரும் பரபரப்பு நிலவியது.  பின்பு அதிகாரிகள் வீடு, வீடாக சென்று மக்களை அரசு வாகனங்களில் அழைத்து வந்தனர். இதையடுத்து  பொன்.ராதாகிருஷ்ணன் விழா மேடைக்கு சென்று உரையாற்றி

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DERA ,home , Vedaranyam
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு