×

மிசோ கட்சி உறுதி பாஜவுடன் கூட்டணி கிடையாது

ஐசால் : மிசோரத்தில் அடுத்த மாதம் 28ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாஜ தலைமையிலான வடகிழக்கு ஜனநாயக கூட்டணியில் மிசோ தேசிய முன்னணி இணையும் என்று திரிபுரா பாஜ  தேசிய பொதுச்செயலாளர் பிரதிமா போமிக் நம்பிக்கை தெரிவித்தார். ஆனால், பாஜ.வுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்று மிசோ தேசிய முன்னணி உறுதியாக தெரிவித்துள்ளது. அதன் தகவல் மற்றும் விளம்பர  செயலாளர் லால்தான்சுவாலா நாம்தே நேற்று அளித்த பேட்டியில், “கூட்டணி என வதந்திகள் பரப்பப்படுகின்றன. சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சியுடனும் எங்கள் கட்சி கூட்டணி வைக்காது. தனித்து போட்டியிடுவோம்’’  என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mizo Party ,BJP , Mizo Party, bjp
× RELATED சேலம் பாஜ நிர்வாகி மீது மாஜி பெண்...