×

தமிழகத்திலுள்ள என்டிசி மில்களில் 8.33 சதவீதம் போனஸ் உடன்பாடு: இன்று முதல் பட்டுவாடா

கோவை: தமிழகத்திலுள்ள தேசிய பஞ்சாலை கழகத்திற்குட்பட்ட (என்டிசி) 7 மில்களில் பணியாற்றும் 2,900 தொழிலாளர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் தொகை வழங்க உடன்பாடு ஆனது. தமிழகத்தில் தேசிய பஞ்சாலை கழகம் (என்டிசி) 7 உள்ளது. இதில் கோவையில் கம்போடியா, பங்கஜா, சிஎஸ்அண்ட் டபிள்யூ, முருகன், ரங்கவிலாஸ் ஆகிய 5 மில்களும், சிவகங்கை மாவட்டம் காளையார் கோயிலில் காளியப்பா மில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பயனியர் மில் ஆகியவையும் உள்ளது. இந்த 7 மில்களில் நிரந்தர தொழிலாளர்கள் 1,600 பேர் மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் 1,300 பேர் என மொத்தம் 2,900 பேர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக குறைந்தபட்ச போனஸ் தொகையாக 8.33 சதவீதம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, போனஸ் குறித்து தொழிற்சங்கங்கள், மத்திய அரசின் மண்டல தொழிலாளர் துறைக்கு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணும்படி கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி நேற்று மாலை கோவையில் மத்திய அரசின் மண்டல தொழிலாளர் துறை கமிஷனர் அண்ணாதுரை முன்னிலையில், நிர்வாகம் தரப்பில் என்டிசி தென் மண்டல பொது மேலாளர் வெங்கடேசன், பொது மேலாளர் (நிதி) சுதாகர் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் அனைத்து தொழிலாளர்களுக்கும் 8.33% போனஸ் தொகையான ரூ.7,000 வழங்குவதாகவும், அனைவருக்கும் ரூ.11 ,000 சம்பள முன்பணமாக வழங்குவதாகவும், அதை 10 மாதத்தில் பிடித்தம் செய்யவதென்றும் என்டிசி நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். போனஸ், சம்பள முன்பணம் இன்று முதல் 2ம் தேதிக்குள்  வழங்குவதாக தெரிவித்தனர். இதை தொழிற்சங்க நிர்வாகிகள் ஏற்று, ஒப்பந்தம் ஏற்படுத்தி கொண்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : NTC ,Tamil Nadu , NTC mill, bonus, silkwada
× RELATED ஒன்றிய அரசால் முடக்கப்பட்ட என்டிசி...