தொலைத்தொடர்பு துறைக்கு பீடி, சிகரெட் போல வரி விதிப்பதா? சுனில் மிட்டல் கொதிப்பு

புதுடெல்லி: பீடி, சிகரெட் போன்ற புகையிலைப் பொருட்களுக்கு வரி விதிப்பது போல தொலைத்தொடர்புக்கு உச்சபட்ச வரி விதிக்கப்படுகிறது என, பாரதி ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல் தெரிவித்தார். போட்டி கட்டணம், புதிய  தொழில் நுட்பங்களுக்கு செலவிடுவது போன்றவற்றால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இதில் ஏர்டெல் நிறுவனமும் விதிவிலக்கல்ல. டெல்லியில் நேற்று நடந்த இந்திய மொபைல்  காங்கிரஸ் நிகழ்ச்சியில், பாரதி ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல் பேசியதாவது: இந்தியாவில் தொலைத்தொடர்பு துறை மீது உச்சபட்ச வரி விதிக்கப்பட்டு வருகிறது.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஈட்டும் ஒவ்வொரு 190 ரூபாயிலும் 37 ரூபாய் ஏதோ ஒரு வகையில் வரியாக போய்விடுகிறது. இப்படி ஒரு முரண்பாடு எப்படி நடைமுறையில் இருக் க முடிகிறது என தெரியவில்லை. பிரதமர்  நோக்கம் ஒருபுறம் டிஜிட்டல் இந்தியாவை உருவாக்குவதாக உள்ளது. மறுபுறம் அலைவரிசை, லைசென்ஸ் கட்டணங்கள் மிக அதிகமாக உள்ளன. ஜிஎஸ்டியில் 18 சதவீத வரி என்பது கூட மிக அதிகம்தான். இந்தியாவில்  தொலைத்தொடர்பு துறையில் ஏறக்குறைய 5,000 கோடி டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவை அனைத்தும் வீணாகிவிட்டன. வேலை இழப்பும் ஏற்பட்டுவிட்டது என்றார்.  

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: