×

போதை மருந்து கொடுத்து என்னை கூட்டு பலாத்காரம் செய்ய முயன்றார்: நடிகை தனுஸ்ரீ தத்தா மீது ராக்கி சாவந்த் பகீர் புகார்

மும்பை: ₹10 கோடி கேட்டு தன் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ள நடிகை தனுஸ்ரீ தத்தா மீது பாலிவுட் நடிகையான ராக்கி சாவந்த் பகீர் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். போதை மருந்து கொடுத்து தன்னை கூட்டு பலாத்காரம் செய்ய முயன்றதாக தனு மீது ராக்கி சாவந்த் குற்றம் சுமத்தியுள்ளார்.பத்து ஆண்டுகளுக்கு முன்பு ‘ஹாரன் ஓகே ப்ளீஸ்’ என்ற இந்தி படத்தில் நடித்தபோது, நானா படேகர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் அரசியல் ரவுடிகளை படப்பிடிப்பு தளத்துக்கு அழைத்து வந்து தன்னையும் தனது பெற்றோரையும் மிரட்டியதாகவும் சமீபத்தில் நடிகை தனு தத்தா புகார் கூறியிருந்தார். பாலியல் புகார்களை தெரிவிக்கும் ‘மீ டூ’ தளத்தில் இந்த புகாரை அவர் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து வேறு பல பிரபலங்களும் ‘மீ டூ’ என்ற பெயரில் கடந்த காலங்களில் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து தொடர்ந்து பகிரங்கமாக கூறி வருகின்றனர்.நானா படேகர் மீது குற்றம் சுமத்திய நடிகை தனு, அவருக்கு எதிராக ஓஷிவாரா போலீசில் புகாரும் அளித்துள்ளார். இந்த நிலையில், நானா படேகருக்கு ஆதரவாக கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் கருத்து தெரிவித்தார். இதனால் தனுஸ்ரீ தத்தா, ₹10 கோடி கோரி ராக்கி சாவந்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு மும்பையில் பேட்டியளித்த ராக்கி சாவந்த், தனு தத்தா மீது பகிரங்கமான குற்றச்சாட்டுக்களை சுமத்தினார். தனு தத்தாவுக்கு எதிராக ‘ஷீ டூ’ (Shee Too) என்ற இயக்கத்தை தொடங்கியிருப்பதாக தெரிவித்த ராக்கி சாவந்த் மேலும் கூறியதாவது;தனு தத்தா ஒரு லெஸ்பியன். இதனை அவரே என்னிடம் தெரிவித்திருக்கிறார். ஒருமுறை என்னை தனு ரேவ் பார்ட்டிக்கு (போதை விருந்து) அழைத்துச் சென்றார். அங்கு கட்டாயப்படுத்தி எனக்கு போதை மருந்துகளை கொடுத்தார். அதன் பிறகு அவர் எனது அந்தரங்க உறுப்புகளை தொட்டு அசிங்கமாக நடந்து கொண்டார். அவருடன் இருந்த சில தோழிகளும் ஆண் நண்பர்களும் என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டனர். அதற்கு நான் கடும் எதிர்ப்பு தெரிவித்த போது, அனைவரும் சேர்ந்து என்னை கூட்டுப் பலாத்காரம் செய்து விடுவோம் என்று மிரட்டினர். இவ்வளவு கேவலமாக நடந்து கொண்ட தனுதத்தா ₹10 கோடி கேட்டு என் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறியிருக்கிறார். அவருக்கு எதிராக நான் ₹50 கோடி கோரி மான நஷ்ட வழக்கு தொடரப் போகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tanushree Dutta ,Sawant , Drug Sawant,complains,actress,Tanushree Dutta
× RELATED சொந்த கட்சியை சேர்ந்தவர் ராஜினாமா...